பிரிட்டிஷின் கார் உற்பத்தி நிறுவனமான பென்ட்லி சொகுசு கார்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. அதிக விலை கொண்ட சொகுசு கார்களை தயார் செய்வதில் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. தற்சமயம் இந்தியாவில் மிகவும் விலை கொண்ட சொகுசு கார் Bentley mulsanne EWB Centenary edition ஆகும்.
இந்த கார் அண்மையில் பெங்களூருவில் காணப்பட்டது. இந்த காரின் விலை 14 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்திய மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானியிடமோ அல்லது கௌதம் அதானியிடமோ இல்லையேல் ஆதர் பூன்னவல்லாவிடமோ இந்த கார் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆம் இந்த ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன் மாடல் பிரிட்டிஷ் பயோலாஜிக்கல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வரும் வி எஸ் ரெட்டிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் பயோலாஜிக்கல் நிறுவனத்தின் நிறுவனரான வி.எஸ். ரெட்டி சொகுசு கார் பிரியர் என்று கூறப்படுகிறது. நாட்டில் இருக்கின்ற அனைத்து பிராண்டுகளையும் சேகரிக்க வேண்டும் என்பது தன்னுடைய சிறு வயது கனவு என அவர் ஒரு முறை பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அவர் பென்ட்லி காரை கார்களின் தாஜ்மஹால் என்று கூறுகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த வி எஸ் ரெட்டி 52 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார் பல வயதினருக்கும் மலிவு விலையில் தடுப்பு ஊட்டச்சத்தை வழங்கும் நோக்கத்தோடு பிரிட்டிஷ் உயிரியல் நிறுவனத்தை இவர் தொடங்கியுள்ளார்.
பிரிட்டிஷ் பயாலஜிக்கல் என்பது ஒரு ஆராய்ச்சி அடிப்படையில், ஆன ஹெல்த் கேர் நியூட்ரா சூட்டிக்கல் நிறுவனம் என்று கூறப்படுகிறது. இது புரோட்டின் பீப்புள் என்று பிரபலமாக அறியப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் பயோலாஜிக்கல் நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்படும் தயாரிப்புகள் குழந்தைகள் நீரிழிவு மகளிர் மருத்துவம் இதயம் ஹெபடைடிஸ் மற்றும் முதியவர்கள் ஊட்டச்சத்து சுகாதார பராமரிப்பு உள்ளிட்டவருக்கான ஊட்டச்சத்து தீர்வுகளை இந்த நிறுவனம் மூலமாக தயாரிக்கப்படும் பொருட்கள் வழங்கி வருகிறது.