ஆரோக்கிய ஆபத்து!. சாப்பிட்ட உடனே இந்த தவறுகளை செய்யாதீங்க!. உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா?

after eating 11zon

சாப்பிட்ட பிறகு மக்கள் தூங்கவோ அல்லது வேலை செய்ய உட்காரவோ தொடங்குகிறார்கள், இது அவர்களுக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும். சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.


நம்மில் பலரும் சாப்பிட்ட உடனே பல வேலைகளையும் பல உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவோம். இது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடையாது. தினசரி காலை மதியம் இரவு என்று மூன்று வேலையும் தவறாமல் சாப்பிடுகிறோம்.அப்படி சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத சில விஷயங்கள் என்ன என்றும் அதை செய்வதால் நம் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது: உணவு சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது, இதை எப்போதுமே செய்யாதீர்கள். ஏனென்றால் நாம் சாப்பிட்ட உடனே நமது உடல் அந்த உணவை செரிமானம் செய்வதற்கான வேலைகளை மேற்கொள்ள ஆரம்பித்து விடுகிறது. நாம் குளித்தால் நமது கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக செரிமான மண்டலத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் நமக்கு செரிமான நிலை அசிடிட்டி பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே சாப்பிட்ட பிறகு குளிக்க கூடாது. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் அல்லது பின் குளிக்க செல்லுங்கள்.

பழங்கள் சாப்பிடக்கூடாது: பலர் உணவருந்திய பிறகு பழங்கள் சாப்பிடுவது நல்ல பழக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான எண்ணம். பொதுவாக பழங்கள் எளிதில் ஜீரணமாக கூடியது. அதனால் நாம் உணவருந்திய பிறகு சாப்பிடும் பழங்கள் தான் முதலில் ஜீரணமாகும். அதேபோல் நாம் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் இருக்கும். இதனால் உணவு அருந்திய பின் பழங்கள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும். அதாவது உணவு அருந்தியதற்கு முன் அல்லது பின் இரண்டு மணி நேரம் கழித்து தான் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கும் செரிமானத்திற்கும் லேசான உடற்பயிற்சி நன்மை பயக்கும். சாப்பிட்ட பிறகு வெறும் 5 நிமிட லேசான செயல்பாடு கூட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட உடனே உட்காரவோ அல்லது படுக்கவோ செய்வதற்குப் பதிலாக, லேசான அசைவுகளைச் செய்யுங்கள். இது உடல் உணவை ஜீரணிக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

கால்களின் குதிகால்களை உயர்த்தி தாழ்த்துவது குளுக்கோஸ் தசைகளுக்குள் செல்ல உதவுகிறது. இது இரத்த சர்க்கரை கூர்மையைக் குறைக்கிறது. சாப்பிட்ட பிறகு லேசான உடல் செயல்பாடு உணவுக்குப் பிறகு குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. லேசான நடைபயிற்சி பயனுள்ளதாக இருக்கும். லேசான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது வயிறு மற்றும் குடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக வைத்திருக்கிறது.

நடைபயிற்சி வயிற்று பாரத்தையும் வீக்கத்தையும் குறைக்கிறது. இரைப்பை குடல் ஆய்வுகளும் இதை ஆதரிக்கின்றன. சாப்பிட்ட பிறகு லேசான அசைவுகளை முயற்சிக்கவும். இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும், செரிமானம் மேம்படும்.

சாப்பிட்ட உடனே தூங்கக்கூடாது: பொதுவாக நம் உடல் சாப்பிட ஆரம்பித்த உடனே அவற்றை செரிமானம் செய்வதற்கான வேலையை செய்ய ஆரம்பித்து விடும். அப்போது நாம் படுத்து விட்டோம் என்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் தொண்டையை நோக்கி வர ஆரம்பித்து விடும். இது மட்டுமல்லாமல் நமது வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் தொண்டை எரிச்சலை உண்டாக்கும். மேலும் நாம் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் வாயு பிரச்சனை ஏற்படும்.

தண்ணீர் குடிக்க கூடாது: ஒரு சிலர் சாப்பிடும் போதே நிறைய தண்ணீர் அருந்தி கொண்டே இருப்பார்கள். அதே போல சாப்பிட்ட பிறகு கூட அதிகம் தண்ணீர் குடிப்பார்கள். இவ்வாறு செய்வது மிகவும் தவறாகும். பொதுவாக வயிற்றில் உள்ள அமிலமானது 1.5 முதல் 3 ph வரைக்கும் இருக்கும். இந்த அளவில் இருந்தால் தான் நாம் சாப்பிடும் உணவு வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்து நன்கு செரிமானம் அடையும். ஆனால் நாம் சாப்பிட்டு பிறகு நிறைய தண்ணீர் குடித்தோம் என்றால் அந்த பிஹெச் மதிப்பு மாறிவிடும். அதனால் செரிமானத்திற்கு தயாராக இருக்கக்கூடிய ஹைட்ரோ குளோரிக் அமிலம் செயலிழக்க கூடும். அதாவது உடல் நீர்த்துப் போயிடும். சாப்பிட அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

Readmore: நாய் கடித்தால் என்னென்ன நோய்கள் ஏற்படும்?. எத்தனை மணி நேரத்திற்குள் ஊசி போட வேண்டும்!.

KOKILA

Next Post

Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை...? வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!

Wed Aug 27 , 2025
இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி யுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுவடையக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]
rain 2025 2

You May Like