fbpx

நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காயை பொடி செய்து இப்படி சாப்பிட்டு பாருங்க.!

பொதுவாக நெல்லிக்காயில் பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்த நெல்லிக்காய் அதிகளவு புளிப்பு சுவையில் இருப்பதால் பலருக்கும் பிடிக்காது. ஒரு சிலர் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நன்மையை தரும்.

ஆனால் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிட முடியாது. எனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு சாப்பிடும் வகையில் ஊட்டசத்தான நெல்லிக்காயை பொடி செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதை எப்படி தயாரிக்கலாம் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?

நெல்லிக்காய் பொடி செய்ய தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 10, எண்ணெய் – 4டேபுள் ஸ்பூன், மல்லி விதை -1கப், வரமிளகாய் -5, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு – 1கப், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம், சுக்கு, எள்ளு – 1டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவிவிட்டு துருவி எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துருவி வைத்த நெல்லிக்காயை ஈரம் போகும் அளவிற்கு நன்றாக வதக்கி எடுக்க வேண்டும். பின்பு வதக்கிய நெல்லிக்காயை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லிவிதை, வரமிளகாய், பெருங்காயம், சுக்கு, கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து நன்றாக சிவக்கும் வரை வறுத்து எடுக்க வேண்டும். இறுதியாக கல் உப்பு சேர்த்து ஆற வைக்கவும். பின்பு ஒரு மிக்ஸியில் வதக்கிய நெல்லிக்காய் மற்றும் மசாலா கலவைகளை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான நெல்லிக்காய் பொடி தயார். இதை காற்று புகாத ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு வைத்து கொண்டால் 6 மாதத்திற்கு உபயோகப்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியை சோறுடன் அல்லது இட்லி, தோசைக்கு பொடியாக கலந்து சாப்பிடும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

Rupa

Next Post

உணவே மருந்து : கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை ஒரே வாரத்தில் வெளியேற்றும் அற்புத உணவுகள்.!

Sun Feb 18 , 2024
பொதுவாக நம் உடல் உறுப்புகளில் முக்கியமான உறுப்பாக கருதப்பட்டு வருவது கல்லீரல். இது நம் உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றும் வேலையையும், உணவுகளை ஜீரணமாக்கும் வேலையையும் செய்து வருகிறது. இத்தகைய கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். இதற்கு ஒரு சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரலில் தேங்கும் நச்சுக்கள் ஒரே வாரத்தில் வெளியாகும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம். இவ்வாறு […]

You May Like