தைராய்டை சரி செய்ய எடுத்துக் கொள்ளும் மாத்திரையை நீங்கள் திடீரென எடுத்துக்கொள்ளாமல் சரி செய்யும் போது என்னவாகும் என்பதை பார்க்கலாம்.
எடை குறைவு அல்லது எடை அதிகரிப்பு, ரத்த சோகை, தூக்கமின்மை, அடிக்கடி எரிச்சலான மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை தைராய்டு குறைபாட்டால் உண்டாகும் பிரச்சினைகள் ஆகும்.
தைராய்டு ஹார்மோன் அளவுகளை சீராக வைத்திருப்பதற்கு அதற்கான மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம். தைராய்டு ஹார்மோன் குறைபாட்டிற்கு உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் தீவிரமான மாதவிடாய் குறைபாடு, கருத்தரிப்பதில் சிக்கல் முதல் இதய நோய் பாதிப்பு வரை அபாயங்கள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளது.

பெரும்பாலான மருந்துகளை உணவுக்கு பின்பு உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகளுக்கு உணவுக்கு முன்பு சாப்பிட சொல்லி பரிந்துரைக்கப்படும். ஆனால் தைராய்டு கோளாறு பொருத்தவரை அதிகாலையிலேயே இதற்கான மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எல்லா நாட்களிலுமே, எதுவும் சாப்பிடுவதற்கு முன்பு அதிகாலையில் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் மருந்து ரத்தத்தில் கலந்து தைராய்டு ஹார்மோனை சரியான அளவில் நிர்வகிக்க உதவும் தாமதமாக தைராய்டு மருந்து எடுத்துக் கொண்டால் அது உடலில் உறிஞ்சப்படும் தன்மை குறைந்து மருந்து சிறப்பாக வேலை செய்யாமல் போகும் அபாயம் இருக்கிறது.

இன்றைக்கு ஒரு நாள் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாம் என்ற உங்கள் விருப்பம் போல நீங்கள் தைராய்டுகான மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது. இந்த குறைப்பாட்டைப் பொருத்தவரை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக இன்று அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு மருந்து உட்கொண்டால், தொடர்ச்சியாக நீங்கள் அதே நேரத்தில் தினமும் மருந்து உட்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரே நேரத்தில் மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது, அதை காபி அல்லது டீயுடன் சேர்த்து சாப்பிட கூடாது. காபி அல்லது டீ குடிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நீங்கள் தைராய்டு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தைராய்டு பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்து மருத்துவரே நீங்கள் எந்த நேரத்தில் மருந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவார்.
ஹைப்போ தைராய்டு: உங்களுக்கு ஹார்மோன் குறைவாக சுரக்கும்போது, சுரப்பியை செயல்படுவதற்கு தூண்டும் வகையில் குறைவான டோஸ் முதலில் கொடுக்கப்படும். ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் அதிக டோஸ் மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது இது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும்.
ஹைப்பர் தைராய்டு: தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது ரேடியோ ஆக்டிவ் அயோடின் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இது கூடுதலாக சுரக்கும் ஹார்மோனை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் நீண்ட நாட்களுக்கு கொடுத்தால் ஆண் மற்றும் பெண் இருவருமே தீவிரமான மலட்டுத் தன்மையை உருவாக்கும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்