நம்மில் பெரும்பாலானவர்களின் நகங்களில் வெள்ளை நிற புள்ளிகள் இருப்பதை கண்டிப்பாக பார்த்திருப்போம்… குறிப்பாக இளம் வயதிலேயே நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கும்.. உடலில் கால்சியம் இல்லாததே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்…
நகங்களில் காணப்படும் வெள்ளை புள்ளிகள் அறிவியல் மொழியில் லுகோனிசியா என்று அழைக்கப்படுகிறது. உடலில் அதிகப்படியான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடலில் உள்ள இரத்த புரதத்தின் அளவு செயல்பாடு ஆகியவை காரணமாக நகங்களில் வெள்ளை புள்ளிகள் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. கால்சியம் குறைபாடு தான் இதற்குக் காரணம் என்ற பொதுவான நம்பிக்கை நிலவினாலும்
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/03/white-spots-on-nails-what-to-do_1.jpg)
உடலில் போதுமான தாதுக்கள் இல்லாதது, ஒவ்வாமை, பூஞ்சை தொற்று போன்றவை காரணமாகவும் நகங்களில் வெள்ளை புள்ளிகள் ஏற்படலாம்.. மேலும் நகங்கள் சேதமடைந்தாலும் சில நேரங்களில் வெள்ளை புள்ளிகள் தோன்றும். நகங்களில் ஏற்படும் வெள்ளை புள்ளிகள் இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, அரிக்கும் தோல் அழற்சி, நிமோனியா, போன்ற ஆபத்தான நோய்களை கூட ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்…
எனவே உங்கள் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும், உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளை பெறுவது நல்லது எனவும் அறிவுறுத்துகின்றனர்.. இருப்பினும், ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம், அவற்றின் ஆபத்தை பெருமளவு குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்..