fbpx

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா.? மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. பலரும் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதியுறுகின்றனர். இதற்கு சிறந்த தீர்வாக இளநீர் இருக்கும். ஆனால் இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி என்பதால் இது தினமும் குடிக்கலாமா? யார் யார் குடிக்க கூடாது? என்பது குறித்து பலருக்கும் கேள்வி இருந்து வருகிறது. இதற்கு மருத்துவரின் அறிவுரை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் இளநீர் தினமும் தாராளமாக குடிக்கலாம். ஆனால் இளநீர் மிகவும் குளிர்ச்சியான பானம் என்பதால் சளி தொல்லை இருப்பவர்கள் வெயில் நேரங்களில் மட்டுமே குடித்து வரலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் ஒரு இளநீரை குடிப்பதால் பசி உணர்வு கட்டுப்படுத்தும்.

மேலும் உடற்பயிற்சி செய்பவர்கள் இளநீரை தண்ணீருக்கு பதிலாக தினமும் குடித்து வருவது நல்லது. நீரிழிவு பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இளநீரை குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இளநீரை வைத்து ஒரு சில உணவுப் பொருட்களை செய்தும் சாப்பிடலாம். இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

இளநீர் குடிப்பது உடலில் பொட்டாசியம் சத்தை அதிகப்படுத்தும் என்பதால் சிறுநீரக கல், சிறுநீரக செயல் இழப்பு போன்ற பிரச்சினை இருப்பவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் நெஞ்செரிச்சல், வயிற்று புண்ணிற்கு இளநீர் சிறந்த தீர்வாக இருந்து வந்தாலும், இப்பிரச்சினை இருப்பவர்கள் காலை நேரத்தில் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

English summary : advantages and disadvantages of drinking fresh water

Read more : 15 ஆண்டுகளுக்கு பின்பு ராகு,புதன் சேர்க்கை.! இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகுது.!?

Baskar

Next Post

நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்த வெந்தயம் போதும்.? எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா.!?

Tue Feb 27 , 2024
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளினாலும் இந்த சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே காலம் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்தே ஆக வேண்டும் என்று கருதி வருகிறோம். ஆனால் நம் உண்ணும் உணவுகளில் கட்டுப்பாடு மற்றும் தினமும் […]

You May Like