fbpx

சிறுநீரகத்தை பாதுகாக்கும் சுரைக்காய்.. வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!?

பொதுவாக காய்கறிகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை தடுக்கலாம்.

சுரைக்காயில் அதிகப்படியான நார்சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனையை சரி செய்து செரிமான மண்டலம் எளிதாக செயல்பட உதவி புரிகிறது. இதனால் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. மேலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் சூடு சம்பந்தப்பட்ட நோய்கள் உடலில் ஏற்படாது.

சுரைக்காயை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. பசியை கட்டுப்படுத்தும் தன்மை இந்த காயில் இருப்பதால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சுரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலை நீர் இழப்பு ஏற்படாமல் தடுத்து சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. பல்வேறு நன்மைகளை உடைய சுரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

உருளைக்கிழங்கை இப்படி சமைத்து சாப்பிடுங்க.! கண்டிப்பாக வாயு பிரச்சனை வராது.!?

Thu Feb 8 , 2024
பொதுவாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ள உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் வாயு தொல்லை அதிகமாகும் என்பதால் அதிகமானோரும் இதை சாப்பிடுவதில்லை. உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தரும் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லதல்ல. உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இதை உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செரிமான மண்டலம் சீராக செயல்படவும், உடலில் ரத்த […]

You May Like