fbpx

Guava: தினமும் கொய்யா இலைகளை சாப்பிட்டால்.. இந்த நோய்கள் கண்டிப்பாக வராது.!?

Guava: பொதுவாக பழங்களில் கொய்யாப்பழம் மிகவும் சத்து வாய்ந்ததாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் பெற்றதாகவும் இருந்து வருகிறது. ஆனால் கொய்யா பழத்தை விட கொய்யா இலைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கொய்யா இலை உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பது முதல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைப்பது வரை பல வகையான நோய்களை தீர்க்கிறது. கொய்யா இலையில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதையும், எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் குறித்து பார்க்கலாம்.

1. கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல வடிகட்டி குடித்தால் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரிகிறது.
2. செரிமான சக்தியை மேம்படுத்தி குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மலச்சிக்கல், அஜீரணம் பிரச்சனையும் குணமாகிறது.
3. கொய்யா இலையில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடி உடலில் நோய் கிருமிகள் உருவாகுவதை  தடுக்கிறது.
4. இலையை தேநீராக குடிக்கும் போது இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து நம் தோலில் பளபளப்பையும் தோலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும் குணப்படுத்துகிறது.
5. மேலும் சரும வறட்சி, இளமையில் முதுமை தோற்றம், சருமத்தில் அரிப்பு, புண்கள், பருக்கள், தழும்புகள் போன்றவற்றையும் சரி செய்கிறது.
6. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் கொய்யா இலையை தேநீராக அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
7. நெஞ்சு வலி, தமனிகளில் அடைப்பு, இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுதல், வாத நோய் போன்றவற்றை ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது.
8. தினமும் ஒரு கொய்யா இலையை மென்று தின்னால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதோடு உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும்.
9. தொண்டை கரகரப்பு, அலர்ஜி, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளுக்கு கொய்யா இலையை தினமும் மென்று வந்தால் நோய் உடனடியாக சரியாகும் என்று வல்லுநர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

English summary : Guava leaf cures many ailments from dissolving fats in the body to regulating blood sugar levels.

Read more : நீங்கள் தினமும் குடிக்கும் தேநீரில் இந்த பொருளை மட்டும் சேர்த்து குடித்து பாருங்கள்.!?

Rupa

Next Post

Water break: வாவ்!… பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை!… நாட்டிலேயே முதல் மாநிலமாக அறிமுகம்!… எங்கு தெரியுமா?

Tue Feb 20 , 2024
Water break: கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதற்காக கேரளா மாநிலத்தில் பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை முறையை செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், இப்போதே ஈரப்பதத்தின் அளவு குறைந்து வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடை காலத்தில் மாணவர்கள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான […]

You May Like