பொதுவாக கோவக்காயில் இலை, பூ, தண்டு பழம் என அனைத்துமே நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அழித்து மருத்துவ குணம் வாய்ந்த காயாக இருந்து வருகிறது. ஆனால் பலரது வீடுகளிலும் கோவக்காய் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதில்லை. கோவக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் என்னென்ன நோய்களை தீர்க்கும் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1. கோவை பழம் சாப்பிட்டு வந்தால் நாக்கு மற்றும் வாய்ப்பகுதியில் உள்ள புண்களை விரைவாக ஆற்றும்.
2. இதில் உள்ள லுப்பியாஸ், லினொலிக் அமிலம், தையாமின், நையாசின் போன்ற அமிலங்கள் நம் உடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது.
3. நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் கோவக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4. தோல் நோய்கள், நீண்ட நாட்களாக ஆறாத புண்கள், காயங்கள் போன்றவற்றை ஆற்றும் மருத்துவ குணம் கோவக்காயில் உள்ளது.
5. கோவக்காய் சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால் நீரிழிவு பிரச்சனையை உடனடியாக கட்டுப்படுத்தும்.
6. கோவக்காய் சிறிதாக நறுக்கி, மோர், இஞ்சி போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
7. கோவக்காய் அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், அல்சர், நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கும்.
8. கோவக்காயின் இலையை அரைத்து சாராக குடித்து வந்தால் மார்பு சளி, மூச்சு விட சிரமப்படுதல், நுரையீரலில் கிருமிகள், மூச்சுக்குழாயில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
9. கோவை இலையை அரைத்து புண்களில் தடவி வந்தால் புண்கள் சரியாகும்.
10. கோவை பழம் சாப்பிடுவதால் வாந்தி, இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் போன்றவை குணமடையும். இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய கோவைக்காய், கோவை பழம், இலைகள் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் பெறலாம்.