fbpx

இந்த ஒரு பொடி போதும்.! மலச்சிக்கல் பிரச்சனையை சில நிமிடங்களிலேயே சரி செய்து விடும்.!?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வதால் பலருக்கும் உணவில் நார்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டால் காலப்போக்கில் மூல நோயை ஏற்படுத்தும். எனவே இதற்கு மருந்தாக பலரும் ஆங்கில மருத்துவத்தை நாடி சென்றாலும், சித்த மருத்துவம் இதற்கு எளிமையான தீர்வை கூறுகிறது. இதைக் குறித்து விளக்கமாக பார்க்கலாம்?

மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக கடுக்காய் இருந்து வருகிறது. இந்த கடுக்காயை பொடியாக சாப்பிட்டு வருவதன் மூலம் முதுமையில் ஆரோக்கியமாகவும், இளமையில் சுறுசுறுப்பாக இருக்கச் செய்கிறது. மேலும் பல்வேறு நன்மைகளை தரும் இந்த கடுக்காய் பொடி, மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வாக இருந்து வருகிறது என்று சித்த மருத்துவர் விக்ரம் குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடுக்காய் சித்தமருத்துவத்தில் காயகற்ப மருந்தாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நாள்பட்ட இறுகிபோன மலத்தை இளகசெய்து வெளியேற்றுகிறது. திரிபலா சூரணத்தில் முக்கிய பொருளாக கடுக்காய் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் திரிபலா சூரணம் சாப்பிட்டு வரலாம்.

கடுக்காயை பொடியாக செய்து தினமும் காலையில் சுடுதண்ணீரில் கலந்து 48 நாட்கள் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதாக நீங்கும் என்று பல சித்த மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள். குழந்தைகளுக்கு கடுக்காய் பொடி அதிகமாக பயன்படுத்தினால் வயிற்று பிரச்சனை ஏற்படும் என்பது குறிப்படத்தக்கது.

English summary : kadukkai powder cured constipation problems

Read more : பெண்களே.! மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.!?

Baskar

Next Post

உடல் எடையை குறைத்தாலும் தொப்பையை குறைக்க முடியவில்லையா.? இதை பண்ணுங்க போதும்.!?

Tue Feb 27 , 2024
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடையை குறைப்பதற்கு உணவு முறைகளிலும், உடற்பயிற்சி முறைகளிலும் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் உடல் எடையை குறைத்தாலும், தொப்பை குறையவில்லை என்பது பலருக்கும் கவலையாகவே உள்ளது. வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதற்கு, துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதற்கு மற்றொரு காரணமாக […]

You May Like