fbpx

நம்ம ஊரு குப்பையில் வளரும் அமெரிக்கா மூலிகை செடி.. என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா.!?

பொதுவாக நம் தமிழ்நாட்டில் பல வகையான மூலிகைச் செடிகள் வளர்ந்து வருகின்றன. அவற்றை பண்டைய காலத்தில் நம் சித்தர்களும் மருந்தாக பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்தியுள்ளனர். தற்போது ஆயுர்வேத மருத்துவ முறைப்படியும், சித்த வைத்திய முறைப்படியும் இந்த மூலிகை செடிகளையே பெரும்பாலும் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் குறிப்பாக மூக்குத்தி பூ செடி என்று அழைக்கப்படும் செடியில் நோய்களை தீர்க்கும் பண்புகள் இருக்கின்றன என்று நம் சித்தர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அமெரிக்காவில் அதிகமாக வளரும் இந்த செடி தமிழ்நாட்டில் குப்பையில் சாதாரணமாக வளர்ந்து நிற்கிறது. சிறுவயதில் இந்தச் செடியின் பூவை வைத்து பலரும் விளையாடி இருப்போம். ஆனால் இந்த செடியில் பல்வேறு வகையான நன்மைகள் உள்ளன. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

வெட்டு காயங்கள், கீழே விழுந்து அடிபட்டு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், நீண்ட நாட்களாக ஆறாத புண், கொழுப்பு கட்டி, நீர் கட்டி, வயிற்றுப்போக்கு போன்றவைகளுக்கு மருந்தாக இருந்து வருகிறது. இந்த இலையின் சாறு எடுத்து வெட்டு காயங்கள் அல்லது புண்களின் மீது தடவி வந்தால் காயங்கள் உடனடியாக குணமாகும்.

வலி நிவாரணியாக செயல்படும் மூக்குத்தி பூ செடியின் இலையுடன் குப்பைமேனி இலையை சாறு எடுத்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். விஷம் அருந்தியவர்களுக்கு விஷத்தை முறிக்க கிராமத்தில் மருந்தாக இதை தான் கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Rupa

Next Post

யாருக்குமே பெரும்பான்மை இல்லை!… பாகிஸ்தானில் ஆட்சியமைக்கப்போவது யார்?

Sun Feb 11 , 2024
பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்துவருகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் ஊழல் வழக்கில் சிறையில் இருந்த நிலையில் அவரது கட்சியின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த வியாழன்று பொதுத்தேர்தல் முடிந்தது. 2 நாளாக ஓட்டுக்களை எண்ணும் பணி நடக்கிறது. மொத்தம் உள்ள 265 இடங்களில் தேர்தல் நடந்த 264 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறையில் […]

You May Like