fbpx

கால்சியம் இரும்புச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்…

நாம் உண்ணும் உணவு பொருட்கள் அதிகமான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியம் கொண்டவையாக இருக்கும். அதே நேரத்தில் சில உணவுப் பொருட்கள் உடலுக்கு பாதிப்பை தருகின்றது. நாம் சாப்பிடும் கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வேர்க்கடலை – உணவுகளில் அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டது வேர்க்கடலை. இந்த வேர்க்கடலையில் கால்சியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. தினமும் வேர்க்கடலையை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் கை, கால், மூட்டுக்கள் போன்றவை நன்கு வலுவடையும் அதோடு மூளையின் செயல் திறன் நன்றாக வளர்ச்சியடையும். கருப்பை பலம் பெறும் , நினைவாற்றல் திறன் அதிகரிக்கும், அதிகமான உடல் சோர்வு நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணையில் பொரித்த மற்றும் வறுத்த வேர்க்கடலையை சாப்பிடுவதை மற்றும் தவிர்ப்பது நல்லது.

தேங்காய் – இந்த தேங்காயில் அதிகமான இரும்புச் சத்து உள்ளது. உயர்தரமான ஆன்டி ஆக்சிடன்ட் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. தேங்காய் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் வயிற்று புண் சரியாகும்.

முருங்கைக் கீரை – முருங்கைக் கீரையில் அதிகமான கால்சியம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் போது ரத்த சோகை, எலும்பு தேய்மானம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆண் பெண் மலடு, கருப்பை கோளாறு, கண் பார்வை குறைபாடு போன்ற எவ்விதமான குறைபாடுகள் இருந்தாலும் கீரையை சாப்பிடுவதால் குணமாகிவிடும்.

பேரிச்சைபழம்- பேரிச்சையில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பேரிச்சையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. தினமும் பேரிச்சை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை நீங்கி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றது.

கருவேப்பிலை- பொதுவாகவே எல்லாருடைய வீட்டிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் பொருள் கருவேப்பிலை, இந்த கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவற்றில் கால்சியம், இரும்புச்சத்து வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் அதிகமாக கொண்டுள்ளது. தினமும் பத்து கருவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வருவால் உடலில் இருக்க கூடிய கெட்ட கொழுப்புக்களை குறைக்கின்றது. உடலில் தேவயைில்லாத கழிவுகளை வெளியேற்றும், தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும், கருப்பை போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

கருப்பு கொண்டைக் கடலை – இந்த கொண்டை கடலையில் அதிகமான கால்சியம், இரும்புச்சத்து, புரதம் மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு, முடி உதிர்வு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Next Post

#TnGovt: 18 வயதிற்கு மேல் இருந்தால் ரூ.10,000 மானியம் கிடைக்கும்...! எப்படி விண்ணப்பிப்பது...? முழு விவரம்...

Mon Nov 14 , 2022
ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்த 1000 விவசாயிகளின்‌ கால்நடைகளுக்குத்‌ தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மதிப்பீட்டில்‌ விதைத்‌ தொகுப்பு மற்றும்‌ புல்கடணைகள்‌ கால்நடை அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ /ஆவின்‌ நிறுவனம்‌ மூலம்‌ ரூ.1.00 கோடி மதிப்பில்‌ வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின விவசாயிகளின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ கால்நடைகளுக்கு தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க விதை […]

You May Like