சிலருக்கு இரவில் சிறு நீர் கழித்த பின்னர் மயக்க நிலை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தவிர்ப்பது என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமது சிறுநீர்ப்பை நிரம்பி சிறுநீர் கழிக்க தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் தூக்கம் களைந்து விடாமல் இருக்க வேண்டும் என்று திடீரென எழுந்து பாத்ரூமை நோக்கி வேகமாக நடந்து சென்று சிறுநீர் கழிக்கும் பழக்கமானது பலருக்கும் இருந்து வருகிறது.
குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் இவ்வாறு அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக சிறுநீரக நோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய், கல்லீரல் நோய் ஆகிய நோய்களுடன் இருப்பவர்களுக்கு தான் இரவு உறங்கிய பின்னர் ஒருமுறைக்கு மேலோ சிறுநீர் கழிப்பதற்கு உணர்ச்சியை தூண்டுகிறது. இந்நிலையில், எழுந்து சென்று நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது கால் பகுதிகளில் ரத்தம் அதிகமாக தேக்கம் ஏற்பட்டு ரத்தம் கீழ்ப்பகுதியிலு இருந்து மேலே செல்வது தடைப்படுகிறது.
இதன் விளைவாக இதயத்துக்கு சிறிது நேரம் இரத்தம் தடைபடுகிறது. ஆகையால் இதயத்தால் மூளைக்கு சரிவர ரத்தத்தை உந்தித் தள்ள இயலாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனை சரிசெய்ய சிறுநீர் கழிக்க தூண்டுதல் ஏற்பட்டதும் திடீரென எழாமல் முதலில் கால்களை கட்டிலில் இருந்து கீழே தொங்க விட வேண்டும். அத்துடன் சில நொடிகள் கழித்து எழுந்து அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சடசடவென வரும் மயக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
Read More : ரூ.1.25 லட்சம் கடன் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்படி விண்ணப்பது..?