முள்ளங்கி பல்வேறு வகையில் உடலுக்கு நலன் தரக்கூடியது. ஆனால், அதனை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் மட்டும் இவையெல்லாம் சாத்தியமாகும்.
வாயு தொல்லை இருந்தால் , இரவில் முள்ளங்கியை உண்பதை தவிர்த்து கொள்வது நல்லது. இது இரைப்பை அழற்சி மற்றும் வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் காரணமாக தூக்கம் வருவதை குறைத்தும் விடுகிறது.
இடுப்பு, கை, கால், முழங்கால், தோள்பட்டை என வேறு எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டாலும், இரவில் முள்ளங்கியை உட்கொள்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
வாய்வு அல்லது புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், முள்ளங்கியை எடுப்பதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. மதிய உணவில் முள்ளங்கி சாப்பிடலாம் ஆனால், இரவில் நிச்சயம் சாப்பிடக் கூடாது.