அதிக நறுமணம் கொண்ட மூலிகையான சடாமஞ்சில் என்ற மூலிகை அற்புதமான சக்திகளை கொண்டுள்ளது. நரம்புதளர்ச்சி உள்ளிட்ட எண்ணற்ற நோய்களுக்கு இதுமருந்தாகின்றது.
சடாமஞ்சில் எனப்படும் மூலிகை எண்ணையை நல்லெண்ணெயுடன் சேர்த்து தலைக்கு குளித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணம் அடையும். இதன் தண்டுகளும், வேர்களும் நமக்கு மூலிகை கடைகளில் கிடைக்கின்றது. இதன் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை அளிக்கின்றது.
தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும் பண்புகளை இது கொண்டுள்ளதால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தோல் வறட்சி, வெடிப்புபோன்றவற்றிற்கு மருந்தாக கொடுக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி இதை தினமும் பயன்படுத்தி வந்தால் பளபளப்பாக முகம் பொலிவுடன் இருக்கும் என மூலிகை மருத்துவம் கூறுகின்றது.
உடலுக்குள் ஏற்படும் நோய்களுக்கும் இது சிறந்த நிவாரணியாகும். இரத்த ஓட்டத்தை சீர் படுத்துதல், இதயத்துடிப்பு சீராக்குதல், மேலும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு சடா மஞ்சில் நல்ல மருந்தாக பயன்படுகின்றது. இது இதயம் சம்மந்தப்பட்டஅனைத்து நோய்களுக்கு தடுப்பு மருந்தாகவும் செயல்படுகின்றது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வாக சடாமஞ்சில் மூலிகை உதவுகின்றது. மாதவிடாய் சுழற்சி சரிவர இல்லாதவர்களுக்கு இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி சுழற்சியை சரியாக்குகின்றது. பித்தத்தைதணித்து அடி வயிற்றில் பூச்சிகளை அழிக்கின்ற. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்ல மருந்து சடாமஞ்சில்.