பொதுவாக இனிப்பு சுவை நிறைந்த பலவற்றில் நமக்கு உண்ணும் ஆவல் அதிகமாக இருப்பதே இயல்பு தான். இருப்பினும் இயற்கையான இனிப்பானது உடலுக்கு பல நன்மையை சேர்க்கிறது என்பது பற்றி இங்கே அறிவோம்.
அதில் இன்றைய பதிவாக பேரீச்சம்பழம் பற்றி தான் காணப்போகிறோம். இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
உணவுப்பழக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. மோசமான வாழ்க்கை முறையால் இன்றைய காலத்தில் ஆண்களிடையே பல பாலியல் பிரச்சனைகள் சந்தித்து வருகின்றனர் . இதன் காரணமாக திருமண வாழ்க்கையில் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இதனை சரிசெய்ய தினமும் 4 பேரீச்சம்பழங்களை எடுத்து பாலுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் ஆற்றல் கூடுவதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவுகிறது.
வயிற்று வலி, அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கலை நீக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு குழந்தைகளுக்கும் பேரீச்சைப் பழத்தை தினமும் 2 முதல் 3 எடுத்து கொண்டு அதனை ஊறவைத்து சாப்பிட்டால், உடனடியாக இந்த பிரச்னைகளிலிருந்து விடுபெறலாம்.
மேலும், தினமும் பாலுடன் 4 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு எடை வேகமாக அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் மன ஆரோக்கியத்தை பராமரிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கச் செய்கிறது.