உடலில் அதிக அளவு கொழுப்பு இருந்தா வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எளிதாக கொழுப்பை குறைக்கலாம். எனவே கொழுப்பு அதிகமாக இருந்தால் அத பத்தின கவலைய விடுங்க …..
நாம் பல வியாதிகளுக்கு எப்போதும் நம்புவது வீட்டிலேயே குணப்படுத்தப்படும் ஹோம் ரெமெடிதான். நமது சமையலறை தோட்டத்திலேயே , காயம் , தீக்கயாம் , வயிற்றுப்போக்கு , தலைலி , வயிற்று வலி இப்படி எண்ணற்ற நோய்களுக்கு வீட்டு வைத்தியம் தான் தீர்வாக அமையும் .
வீட்டு வைத்தியத்தில் எண்ணற்ற வைத்தியங்கள் நம்மை தக்க சமயத்தில் காப்பாற்றுகின்றன. ஒவ்வொன்றை எடுத்து அதை இத்துடன் , இதை அத்துடன் கலந்தால் போது வைத்தியத்திற்கு தேவையான மருந்து ரெடி ஆகிவிடும். அதே சமயம் சில நேரங்களில் நாம் எதையாவது செய்து நோயை அதிகப்படுத்திக் கொள்ளவும் கூடாது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/உடல்-பருமன்.jpg)
சரி இப்போ உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம். . கொழுப்பு என்பது நமது கல்லீரலில் இருந்து உற்பத்தியாகின்றது. இது நமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று . உடலில் பாகங்கள் சரியாக இயங்குவதற்குகொழுப்பு தேவைப்படுகின்றது. உறுப்புகள் இயங்குவதற்கும் ஹார்மோன் உற்பத்தி செய்வதற்கும் தேவைப்படும் முக்கியமான ஒன்று.
நல்ல கொழுப்பு நம் உடலுக்கு எப்போதும் தேவை அதே சமயம் அதிகப்படியான கொழுப்பு இருந்தால் அது மாரடைப்பை விளைவிக்கும். பெரியதோ , சிறியதோ அல்லது இருதயம் தொடர்பான நோய் ஏற்படலாம்.
ஒருவேளை நீங்கள் ஆரோக்கியமற்ற வாழ்வு முறையை பின்பற்றினால் உங்கள் வாழ்க்கை முறையில் அதாவது உணவு முறையில் வெளியில் சாப்பிடுதல் , உடற்பயிற்சி செய்யாது இருத்தல் , இது போன்ற காரணங்களால் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்துவிடும். இதனால் உங்கள் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ஆரம்ப கட்டத்திலேயே அதிகப்படியான கொழுப்பு உடலில் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு வேளை கவனிக்காமல் கூட விட்டுவிடலாம். ஆனால் இதற்கான அறிகுறிகள் உங்களுக்கு கண்டிப்பாக தெரியவரும்.
உங்கள் மருத்துவவறை அணுகும்போது அவர் கொடுத்த மருந்துகளை சாப்பிடுங்கள், அதே சமயம் ஆயுர்வேதா உங்களுக்கு இயற்கையான சில வீட்டு வைத்தியங்களை உங்களுக்கு வழங்குகின்றது. அதையும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். ..
தேன்: தேன் உங்களின் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து சம அளவில் வைத்திருக்க உதவுகின்றது. இதில் 6 சதவீதத்தத்திற்கு குறைவான அளவு கொழுப்பு இருப்பதால் உங்களின் உடலில் கொழுப்பின் அளவை சரியாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். காலையில் உணவு சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் அளவில் தேன் மற்றும் ஆப்பிள் சைடர் , 2 ஸ்பூண் ப்சைலம் ஹஸ்க் சாப்பிட்டால் கொழுப்பு கரைந்துவிடும் .
பூண்டு: பூண்டு சாப்படுவதால் கொழுப்பை சம அளவில் வைத்துக் கொள்ள முடியும் உயர் கொழுப்பு உள்ளவர்கள் கூட பூண்டு சாப்பிட்டால் நல்ல விளைவுகளைக் கொடுக்கும். தினமும் 2 வல் பூண்டு சாப்படுவது உடலுக்கு மிகவும் நல்லது. இதை லவங்கத்துடன் சேர்த்து சாப்பிடும் போது நல்ல பலனை கொடுக்கின்றது.
வெந்தயம்: வெந்தயம் நம் உடலை குளிர்வித்து எப்போதும் சரியான அளவில் கொழுப்பை வைத்துக் கொள்ள உதவும் ஒரு பொருள். ரத்தத்தை அதிகரித்து கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது.
மல்லி: மல்லி விதைகளை தினமும் கொதிக்கும் நிரில் கலந்து வடிகட்டி குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்குகின்றது. டாக்சின்களை நீக்கி கொழுப்பை குறைக்க உதவுகின்றது. மேலும் ஜீரணத்தை மேம்படுத்த உதவுகின்றது