பொதுவாக தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பலரும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுப் பொருட்கள் நம் வயிற்றிலேயே தேங்கி விடுகிறது.
குறிப்பாக குடல் பகுதியில் நச்சுக்கள் தேங்குவதால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவை நமக்கு ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைகளுக்கு மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டாலும் இதனால் பக்க விளைவுகள் ஏற்படும். எனவே நம் உணவு பழக்க வழக்கங்களின் மூலமே இந்த குடலில் உள்ள நோய்களை குணப்படுத்தலாம். இவ்வாறு குடலில் உள்ள நச்சுகளை குணப்படுத்த சியா விதைகள் உபயோகப்படுத்தலாம். இதை எவ்வாறு செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?
முதலில் சியா விதைகளை ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஆரஞ்ச் பழத்தை தோல் நீக்கி நன்றாக அரைத்து சாறு எடுத்து இதனை சியா விதைகளுடன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, குடலில் உள்ள நச்சுகள் வெளியேறிவிடும்.
மேலும் வாரத்திற்கு ஒரு நாள் இந்த ஊற வைத்த சியா விதைகள் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்த கலவையை குடித்து வந்தால் இதய நோய், புற்றுநோய் உடலில் வராமல் தடுக்கலாம். மேலும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். இதில் உள்ள சியா விதைகள் மூளை செல்கள் வளர்வதை அதிகரிக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய இந்த ஊறவைத்த சியா விதை ஆரஞ்சு சாறை குடித்து நல்ல பலன் பெறலாம் என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.