fbpx

வீட்டிலேயே சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸ் எப்படி செய்யணும் தெரியுமா.!

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் வேகமான சமையல் முறையை பலரும் விரும்பி வருகின்றோம். அந்த வகையில் நூடுல்ஸ் சமைப்பது என்பது பலருக்கும் எளிதான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் கடைகளில் வாங்கும் நூடுல்ஸ் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கொடுக்கும்போது அது பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தி உடல் நலனை மோசமாக்குகிறது. இதனால் குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸ் வீட்டிலேயே எவ்வாறு சமைக்கலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1கிலோ, மைதா மாவு -1/2 கிலோ, தண்ணீர், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து புரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து விட வேண்டும். இந்த மாவு கலவையை முறுக்கு பிழியும் உலக்கையில் போட்டு நூடுல்ஸ் வடிவ உருளையான அச்சில் பிழிந்து கம்பியில் தொங்க விடவேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து நூடுல்ஸ் தொங்கவிடப்பட்ட கம்பியை பாத்திரத்தின் மேல் வைத்து நூடுல்ஸ்சை சுடு தண்ணீரின் ஆவி படும்படி வைக்க வேண்டும் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்தும் வேக வைக்கலாம். இவ்வாறு வேக வைத்து எடுத்த நூடுல்ஸ்சை உடனடியாக மசாலாக்கள் சேர்த்து செய்து குழந்தைகளுக்கு தரலாம் அல்லது வேக வைத்த நூடுல்ஸ்சை காயவைத்து ஒரு வாரம் வரைக்கும் பயன்படுத்தலாம்.

Rupa

Next Post

சூப்பர்...! இவர்கள் எல்லோருக்கும் 50% அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்...! எப்படி பெறுவது தெரியுமா...?

Mon Feb 5 , 2024
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய […]

You May Like