முகத்தில் இருக்கும் பொலிவை தாண்டி அஆங்காங்கே திட்டு திட்டாக முகத்தில் கருமை நிறம் படர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் தோற்றமானது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் மற்றும் முகப்பொலிவையும் பாதித்து விடுகிறது.
முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் முக்கியமான ஒன்றாக நெற்றி பகுதி இருக்குறது. இதனை சரிசெய்ய வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே இதற்கான தீர்வை காணலாம்.
வீட்டில் இருக்கும் மஞ்சளுக்கு அதிக மருத்துவ குணம் உள்ளது. இது பல சரும பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. பச்சை பாலினை எடுத்து கொண்டு மஞ்சளை அதனில் கலந்து தோல் கருமையாக காணப்படும் இடத்தில் தடவ வேண்டும். மேலும் சிறிது நேரம் கழித்த பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் டேனிங் என்று சொல்லப்படும் சரும பிரச்சனை நீங்கும்.
இரண்டாவதாக வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துக்களை வைத்து இதற்கான தீர்வை பார்ப்போம். வெள்ளரிக்காயை உண்பதற்கு மட்டும் இல்லாமல் , வெள்ளரிக்காய் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை பயன்படுத்தினால் சருமத்தில் இருக்கும் டேனிங் மற்றும் கருவளையம் போன்ற பிரச்சனைகள் நீங்க உதவுகிறது.