வெந்நீருடன் ஒரே ஒரு கிராம்பு சாப்பிட்டால் அது பல்வேறு நோய்களை குனப்படுத்துகிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்..
ஆயுர்வேதத்தில் கிராம்புக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, நச்சுத் தடை பொருள், அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி போன்ற சிறந்த பண்புகளைக் கிராம்பு கொண்டுள்ளது. இது தவிர, கிராம்பில் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, மாங்கனீசு, உணவு நார், அயோடின், வைட்டமின் கே மற்றும் சி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகளும் உள்ளன.
இத்தனை சத்துக்கள் நிறைந்த கிராம்பை, தினமும் தவறாமல் எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு நபரும் இரவில் தூங்குவதற்கு முன் 1 கிராம்பு சாப்பிட்டு அதனுடன் 1 டம்ளர் சூடான நீரை குடிக்க வேண்டும். இது பல வகையான கடுமையான நோய்களை நீக்குகிறது. இதன் மூலம் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது.
மேலும் இது பல வயிற்று பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.. உதாரணமாக, வயிற்று எரிச்சல், வாந்தி மற்றும் அஜீரணம் போன்ற பல சிக்கல்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, கிராம்பை உட்கொள்வதன் மூலம் மார்பு சளியையும் வெளியே கொண்டு வருகிறது. செரிமானம், பித்தம், வாயு பிரச்சனைகள், ஆஸ்துமா, காய்ச்சல், அஜீரணம், காலரா, தலைவலி, விக்கல் மற்றும் இருமல் போன்ற நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.