பொதுவாக நம் முன்னோர்களின் காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, பல வகையான நல்ல செயல்களை செய்து வந்தனர். மேலும் ஊட்டச்சத்தான உணவுகளையும் உண்டனர். இதனால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். முன்னோர்களின் பழக்க வழக்கங்களில் முக்கியமான ஒன்றுதான் ஆயில் புல்லிங் என்று குறிப்பிடப்படும் எண்ணெய் வைத்து வாய் கொப்பளிக்கும் பழக்கம். இந்த ஆயில் புல்லிங்கை எப்படி செய்யலாம் என்றும், இதன் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்தும் பார்க்கலாம்.
தினமும் காலையில் எழுந்து பல் துலக்கிய பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து வாயில் பல் இடுக்குகளுக்குள் படும்படி நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். தேங்காய் எண்ணெயை விட, நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஆயில் புல்லிங் செய்வதால் வாயின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் வாய் சுத்தமாக இருக்கும்.
* ஆயுர்வேத மருத்துவத்துடன் தொடர்புடைய ஆயில் புல்லிங்கை பல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி செய்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* வாயில் நல்லெண்ணையை ஊற்றி கொப்பளிக்கும் போது பற்கள் மற்றும் ஈறுகளில் தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும்.
* மேலும் வாய், நாக்கு போன்ற உறுப்புகளில் ஏற்படும் புண்களை குணப்படுத்துகிறது.
* சூட்டினால் ஏற்படும் நோய்களையும், நெஞ்செரிச்சலையும் சரி செய்கிறது.
* ஒரு சிலருக்கு வயிற்றுப்புண், குடல் புண், நெஞ்செரிச்சல் இருக்கும் போது வாய் துர்நாற்றம் அடிக்கும். அப்படியானவர்கள் ஆயில் புல்லிங்கை அடிக்கடி செய்து வரலாம்.
* ஒற்றைத் தலைவலி, ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
* குறிப்பாக தூக்கமின்மையை சரி செய்து நன்றாக தூங்குவதற்கு வழிவகை செய்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய ஆயில் புல்லிங் தினமும் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Read More : ’இந்த லிஸ்ட் என் கைக்கு வந்தே ஆகணும்’..!! மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு..!! மாஸ் காட்டும் விஜய்..!!