சர்க்கரை, நோய், இரத்த அழுத்த பிரச்சனையை அடுத்து மக்கள் அதிகம் அவதிப்படும் ஓர் பிரச்சனை தான் தைராய்டு. இந்த தைராய்டு சுரப்பியானது கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியர்களில் பத்தில் ஒருவருக்கு ஹைப்போதைராய்டு பிரச்சனை உள்ளது என்பது தெரியுமா?
எப்போது தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவான அளவில் வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறதோ, அப்போது தைராய்டு பிரச்சனை தொடங்குகிறது. தைராய்டு பிரச்சனையானது உடலின் மெட்டபாலிசத்தை பாதிப்பது மட்டுமின்றி, விவரிக்க முடியாத உடல் எடையை அதிகரிக்கிறது.

ஆனால் இந்த தைராய்டு பிரச்சனையைக் குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், மருந்துகளுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இங்கு தைராய்டு பிரச்சனையால் உடல் பருமனாகி அவதிப்படுபவர்கள், தங்களின் அதிகப்படியான உடல் எடையைக் குறைத்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி வந்தால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்.

அயோடின் அளவை கவனிக்கவும் நமது தைராய்டு சுரப்பியை சரியாக செயல்படத் தூண்டும் ஒரு முக்கியமான கனிமச்சத்து தான் அயோடின். எப்போது உடலுக்கு போதுமான அயோடின் கிடைக்கவில்லையோ, அது ஹைப்போ அல்லது ஹைப்பர் தைராய்டிசத்திற்கு வழிவகுக்குகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அயோடின் உட்கொள்வதை சற்று அதிகரிக்க வேண்டும்.

இந்த அயோடின் சத்தானது விலங்கு புரோட்டீன், கடல் உணவு மற்றும் உப்புகளில் காணப்படுகிறது. மீன் மற்றும் முட்டைகள் உடலில் தைராய்டை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. எனவே தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த வகையான உணவுகளை சற்று அதிகம் எடுப்பது நல்லது.

சர்க்கரையை தவிர்க்கவும் தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தங்கள் உணவில் சர்க்கரையை தவிர்க்க வேண்டும். சர்க்கரை உணவுகளின் மீதான ஆர்வத்தைக் குறைக்க தேன் அல்லது பெர்ரி போன்ற பழங்களை உட்கொண்டு, தங்களின் ஆவலை போக்கிக் கொள்ளலாம்.

நீரேற்றத்துடன் இருக்கவும் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் முதலில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். எனவே எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் நீரை கொண்டு செல்லுங்கள். ஏனெனில் இதனால் உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு மட்டுமின்றி, நல்ல செரிமானத்திற்கும் உதவி புரியும்
சிறு இடைவெளிகளில் உண்ணவும் தைராய்டு பிரச்சனையானது செரிமானத்தை மெதுவாக்கும். எனவே ஒரே வேளையில் வயிறு நிறைய சாப்பிடாமல், சிறு இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். அதாவது ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிடுவதற்கு பதிலாக, 5-6 வேளை கொஞ்சமாக சாப்பிடுங்கள்.
புரோட்டீனை அதிகம் உட்கொள்ளவும் பருப்பு வகைகள், மீன் மற்றும் இறைச்சி போன்ற புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளில் செலினியம் உள்ளது. இது தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் உடல் பலவீனத்தை சமாளிக்க உதவுகிறது. மேலும் இது தசைகளை வலுவாக்கி, உடலை வலிமையாக்குகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகளை உண்ணவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தைராய்டு பிரச்சனை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் செல் காயங்களில் இருந்து உடலை பாதுகாக்கின்றன. கிரான்பெரர்ரி, அவகேடோ மற்றும் ஆப்பிள்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. மேலும் நிறைய காய்கறிகள் மற்றும் நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, செரிமானத்திற்கும், நச்சுத்தன்மையாக்கவும் உதவுகிறது.
காப்ஃபைன் அளவைக் குறைக்கவும் பல ஆய்வுகளின் படி, தைராய்டு மருந்துகளுடன் காபி குடிப்பவர்களுக்கு அசாதாரண அளவில் TSH அளவு இருப்பது தெரிய வந்தது. ஆகவே தைராய்டு பிரச்சனையால் உடல் பருமனாவதைத் தடுக்க காபி குடிப்பதைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.