மாம்பழத்தில் எண்ணற்ற ரகம் உள்ளது. சில பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. அதே சமயம் மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாங்காய் தீர்வாக உள்ளது. அதே சமயம் மாம்பூவில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா?
மாங்காயில் ஊறுகாய் , சாம்பார் போன்ற சுவையான உணவு வகைகளும் உள்ளன. மாங்காய் சாப்பிடுவதால் உணவு செரிக்கவும் , வயிற்றுப்புண்ணை ஆற்றவும் நமக்கு எண்ணற்ற வகையில் உதவியாக உள்ளது. அதே சமயம் அல்சருக்கான தீர்வு, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துதல் போன்ற மாம்பூவின் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மாம்பூ.. அல்சர் நோயை குணப்படுத்த உதவ முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுமட்டும் இன்றி சர்க்கரை நோயை நிர்வகிப்பதிலும் முக்கியமான பொருளாக உள்ளது.
மாமரத்தில், எண்ணற்ற நன்மைகள் கொண்ட மருத்துவ குணம் உள்ள தாவரவகையைச் சார்ந்தது. இதில் உள்ள பழங்கள், இலைகள், பூக்கள் , மரப்பட்டை கூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்களைக் கொண்ட மகத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மாமரத்தின் மூலம் கிடைக்கும் பழம் உலக அளவில் பயன்படுத்தப்படுகினறது. மாம்பழத்தின் சுவைக்காகவே அந்த சீசனுக்காக நாம் காத்திருப்போம்.
மாம்பூவின் நன்மைகள் :நிறைய பேருக்கு மாம்பூவில் உண்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் பல நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன. ஆனால் , அனைத்து சீசனிலும் கிடைப்பதில்லை எனினும் அந்தந்த பருவத்தின்போது நாம் தவறவிடக்கூடாது.
மாம்பூக்களில் ஏராளமான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. மாம்பழத்தில் உள் ள பாலிஃபீனால்களில் காலிக் அமிலம் , குர்செடின் மாங்கிஃபெரின், எலாஜிக் அமிலம் , அலனைன் , த்ரயோனைன் மற்றும் டிரிப்டோன் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள அத்தியாவசியமான பொருட்கள் மாம்பூவிலும் உள்ளது. ஈதைல் , மீதைல், என் பென்டைல் , என் புரப்பைல், என் ஆக்டைல் , 4- பெனைல் , 6 பெனைல் , என் ஹெக்சைல் ஆகியவை நமக்கு நன்மைகளை செய்கின்றது. லினலூல் மற்றும் எலிமினே , ஹியூமுலினே என்ற முக்கிய எண்ணைப் பதத்தை அளிக்கின்றது. இந்த எண்ணெய் உடலில் ஆன்டி ஆக்சிடினாக செயல்படுகின்றது. இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக உள்ளது.
மாம்பூவின் உடல் ஆரோக்கிய நன்மைகள் – தோல் அழற்சி நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுகின்றது. உடலில் உள்ள தோலை சிவப்பாக்கி அரிப்பு நோயை ஏற்படுத்தும் எக்சிமா என்ற நோய்க்கு இது அருமருந்தாகும். சில ஆயுர்வேத ஆராய்ச்சிகள் நன்றாக கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரில் மாம்பூக்களை சர்க்கரையுடன் சேர்ந்து குடித்து வந்தால் இந்த நோய் குணமாகின்றது. இதே போல வாய்ப்புண்ணுக்கும் மாம்பூ மிக மிக நல்லது.. மாம்பூவினை கஷாயமாக பருகிவர வாய்ப்புண் வராமல் தடுக்கலாம் அல்லது வந்த பின்னரும் குணப்படுத்தலாம்.
அனைவரையும் பாடாய்படுத்தும் வாயுத் தொல்லையை இந்த மாம்பூவின்கஷாயத்தின் மூலம் விரட்டலாம். நெஞ்செரிச்சல் மற்றும் குடல் புண்ணுக்கும் அருமருந்தாகும்.
பல்வலிக்கு மாம்பூக்கல் உதவுகின்றது. இதில் உள்ள ஆயுர்வேத குணம் ஈறுகள் வீங்கி வலிவருவதைத் தடுக்கின்றது. பல்வலிக்கும் உதவும் . மாம்பூவை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி குடிப்பதால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுப்பெற்று பல்வலி வராமல் தடுக்க முடிகின்றது.
நீரிழிவில் மாம்பூவின் பங்கு : மாமரத்தின் பல்வேறு பாகங்கள் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு தேவையான நீரிழிவை எதிர்க்கும் மாங்கிபெரின் என்ற கலவை இதில் இயற்கையிலேயே உள்ளது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் , கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும் நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடையவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
சில ஆய்வுகள் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீருடன் உலரவைக்கப்பட்டு அரைக்கப்பட்ட பொடியை சேரத்து சாப்பிட்டுவை செரிமான அமைப்பை மேம்படுத்துகின்றது. உடலுக்கு குளிர்ந்த பண்ணை அளிக்கின்றது. செரிமானத்தை அதிரிக்கின்றது நாள்பட்ட வயிற்றுப்போக்கை குணப்படுத்திநெஞ்செரிச்சலைல குணப்படுத்துகின்றது. இது போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கு மாம்பூக்களை தண்ணீரில் நன்றாக வேகவைத்து சாப்பிடலாம்.
எவ்வாறு சாப்பிடவேண்டும் :மாம்பூ மற்றும் மாதுளைப் பூக்கள் இரண்டையும் நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் 3 நாட்களில் சளி குணமாகின்றது. இரு பூக்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேநீர் மூளை மற்றும் இருதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது. . மாம்பூ பொடியுடள் சீரகப் பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகி மூல நோய்க்கு தீர்வாகின்றது. மேலும் மலேரியா போன்ற நோய்களுக்கும் தீர்வாகின்றது.
காய்ந்த மாம்பூக்களை கொசுவிரட்டியாக பயன்படுத்தும்போது டெங்கு மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கமுடியும். ரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்குள் உருவாக உதவுகின்றது. காயத்திற்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது. மூக்கில் இருந்து ரத்தம் வருவதையும் நிறுத்த உதவுகின்றது. மாம்பூக்களில் எண்ணற்ற சிகிச்சை பண்புகள் உள்ளன. இது மனி ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிக்கின்றது. அதன் அளவு மற்றம் பக்க விளைவுகள் பற்றி அறிய ஆயுர்வேத மருத்துவர்களை மேலும் ஆலோசிக்கலாம்