தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு துரித உணவுகளை சாப்பிட்டு வருவதால் தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் பல நோய்கள் உடலில் ஏற்படுகின்றது.
இவற்றில் குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை தற்போதுள்ள காலகட்டத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. இதனை உணவின் மூலமே எளிதாக சரி செய்யலாம். மேலும் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்?
மலச்சிக்கல் பிரச்சனை நீண்ட நாட்கள் நீடித்தால் மூல நோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு எளிதாக வீட்டு வைத்திய முறையில் சியா விதைகள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதாக வெளியேறும். மேலும் இந்த சாறு செரிமான மண்டலத்தை சீர்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை உடனடியாக சரி செய்கிறது.
முதலில் ஒரு கப் சியா விதைகளை ஒரு பாத்திரத்தில் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இது நன்றாக ஊறிய பின்பு எலுமிச்சை சாறாக கலந்து சிறிதளவு தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதாக நீங்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.