fbpx

முகத்தில் உள்ள தேமல் உடனே மறைய எலுமிச்சம் பழத்தை இப்படி பயன்படுத்துங்க.!?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாற்றங்களினாலும், உணவு பழக்க வழக்கங்களினாலும் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக நம் தோலில் பல வகையான தோல் வியாதிகள் உருவாகின்றன. முக்கியமாக தேமல் என்பது நம் தோலில்  பூஞ்சைகள் தாக்குதலால் ஏற்படும் ஒரு வகையான நோய் பாதிப்பாக இருந்து வருகிறது.

தேமல் நோய்க்கான காரணங்கள்: தேமல் நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதிக்கிறது.  ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக தோலில் தேமல் நோய் ஏற்படுகிறது. ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக வியர்வை வெளியேறுதல், எப்போதும் அழுக்கு மற்றும் ஈரப்பதம் தோலில் இருப்பது போன்ற காரணங்களால் பூஞ்சைகள் எளிதாக தாக்கும்.

எலுமிச்சம் பழத்தை வைத்து தேமல் நோயை எப்படி சரி செய்யலாம்
எலுமிச்சம் பழம் தோலை காயவைத்து பொடியாக்கி பின் சம அளவு படிகாரம் எடுத்து அதையும் பொடியாக்கி இரண்டையும் ஒன்றாக கலந்து தண்ணீருடன் சேர்த்து தேமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் ஒரே வாரத்தில் தேமல் குணமாகும். மேலும் எலுமிச்சை சாறுடன் துளசி இலை சாறு சேர்த்து தேமலில் தேய்த்து வந்தால் விரைவில் குணம் அடையலாம்.

Rupa

Next Post

வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் அதிமதுரம் எப்படி பயன்படுத்தலாம்.!?

Mon Feb 5 , 2024
பொதுவாக ஆண்களுக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் முடி உதிர்ந்து வழுக்கை தலையாக இருப்பது மிகவும் கடினமான ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. வேகமான வாழ்க்கை முறை, தூக்கமின்மை, மன அழுத்தம், துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, மரபியல் காரணம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஆண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை தலையாக இருப்பதற்கு காரணமாக இருந்து வருகிறது. ஆண்களுக்கு 40 வயதை தாண்டியும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திருமணமாகாமல் அவதியுற்று வருகின்றனர். […]

You May Like