fbpx

திடீரென உடல் எடை கூடுகின்றதா? என்ன காரணமாக இருக்கும் ?..

சிலருக்கு ஒரேநாள் இரவில் உடல் எடை கூடிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். உண்மைதான்! சில காரணங்களால் உடல் எடை விரைவாக கூடலாம்.

நம் உடலில் 7000 கலோரி செலவழிக்கப்படாமல் அல்லது எரிக்கப்படாமல் இருந்தால் உடல் எடை 1 கிலோ அதிகரிக்கும்.

 

மது – முந்திய நாள் இரவு அதிகம் மது அருந்தியிருந்தால் அல்லது முந்தின நாள் போதுமான நீர் அருந்தாமல் இருந்தால் மறுநாள் உடல் எடையில் மாற்றம் தென்படும். போதுமான நீர் அருந்தாவிட்டாலும், மது அருந்தினாலும் உடல் நீரை வெளியேற்றாமல் தக்க வைத்துக்கொள்ளும். உடலில் நீர் சேர்வதால் உடல் எடை அதிகரிக்கிறது.

உறக்கம் – போதுமான நேரம் உறங்காதது மற்றும் ஆழ்ந்து உறங்காதது இவை இரண்டுமே உடல் எடை அதிகரிக்க காரணமாகின்றன. குறைந்த நேரம் உறங்கினால், மறுநாள் அதிகமாக அளவு உண்ணும்படி நேரக்கூடும். வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு சாப்பிடும்போது, உடலின் நேர ஒத்திசைவு செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது.

ஆரோக்கியமான
ஆரோக்கியமான தூக்க முறைகளை பின்பற்றினாலே போதும்.. இந்த ஆபத்து மிகவும் குறைவாம்..

மன அழுத்தம் – முந்தின நாள் உணர்ச்சிரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்போரின் எடை மறுநாள் அதிகரிக்க வாய்ப்புண்டு. மன அழுத்தம் அதிகமாகும்போது உடலில் கொழுப்பை சேர்க்கும் கொர்டிசோல் என்ற ஹார்மோனின் உற்பத்தி உயருகிறது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு படிகிறது.

மாதவிடாய் – மாதவிடாய் வரப்போகும் நாள்களில் மாதவிடாய்க்கு முந்தைய உபாதையின் காரணமாக பெண்களுக்கு உடலில் நீரின் அளவு அதிகரித்து எடையும் உயருகிறது.

மருந்து – புதிதாக ஏதாவது மருந்து அல்லது மாத்திரை சாப்பிட தொடங்கியிருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும். மருந்து சாப்பிடுவதால் பசி அதிகமாகிறது; சாப்பாடும் பெருகுகிறது. இது வளர்சிதை மாற்ற வேகத்தை குறைக்கிறது.

இரவு உணவு – இரவு நெடுநேரம் கழித்து உணவு சாப்பிட்டாலும் உடல் எடை திடீரென உயரும். சாப்பிடவேண்டிய உணவை நேரந்தவறி உண்டால் அது செலவழிக்கப்படுவதற்குப் பதிலாக சேமித்து வைக்கப்படும். இதுவே உடல் எடை உயர காரணமாகும்.

Next Post

அசத்தல்... மேலும் 50,000 பேருக்கு தமிழக அரசு சார்பில் இலவச மின் இணைப்பு...! அடுத்த மாதம் முதல்... அமைச்சர் தகவல்

Wed Oct 12 , 2022
50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி; அடுத்த வரும் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியத்தின் சொந்த நிறுவுதலில் 50 விழுக்காடு மின் உற்பத்தி அதிகரிக்கும். கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் […]
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like