கண்களில் ஏற்படும் கருவளையத்தை எப்படி நீக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முன்பாக கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை நாம் தவிர்த்தாலே நம் முகம் பொலிவுடன் கருவளையம் இல்லாமலும் இருக்கும்.
தூக்கமின்மை காரணமாக கருவளையம் வருவது தான் பலருக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக ரத்த சோகை முக்கிய பங்காற்றுகிறது. கண்களை அடிக்கடி கைகளால் தேய்ப்பது கண் வளையம் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கத்தினால் கருவளையம் ஏற்படும். நீரிழிவு, பரம்பரை மரபணு, தைராய்டு மற்றும் கண் சொட்டு சிகிச்சை போன்றவற்றினாலும் கருவளையம் ஏற்படும். இந்த கருவளையத்தை போக்க பாதாம் எண்ணெயை கண்ணுக்கு தொடர்ந்து தேய்த்து வருவது நல்ல பலன் கொடுக்கும்.
அதாவது, viட்டமின் A, D, E மெக்னீசியம், கொழுப்பு மற்றும் அமிலங்களை கொண்ட இந்த பாதாம் எண்ணையை கருவளையம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் போதும் சில நாட்களிலேயே மாற்றம் ஏற்படுவதை நீங்கள் உணர முடியும். இரவு நேரத்தில் பாதாம் எண்ணையை கை விரல்களில் எடுத்து கண்ணுக்கு தேய்த்து மசாஜ் செய்யலாம். இது கருவளையத்திற்கு தீர்வு தருவதுடன் நமக்கு நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.