fbpx

“HEART ATTACK, CANCER” போன்ற நோய்களை ஏற்படுத்துமா இவை!!! பெண்களே கவனமாய் இருங்கள்…

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோய் உள்பட பயங்கரமான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சானிட்டரி நாப்கின்களில் அபாயகரமான ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ரசாயன பொருட்கள் உள்ள நாப்கின்களை பயன்படுத்தும்போது புற்றுநோய், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டும் இன்றி குழந்தையின்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

மார்க்கெட்டுகளில் கிடைக்கும் 4 சானிட்டரி நாப்கின்கள் உள்பட 10 நாப்கின் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், பென்சென்டிகார் பாக்சிலிக் அமில எஸ்டர்கள் எனப்படும் பித்தலேட்டுகள் மற்றும் ஆர்கானிக் சேர்மங்கள் இருந்தன.  இதயம் மற்றும் இனப்பெருக்க அமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகள், நீரிழிவு, சில வகையான புற்று நோய், பிறப்பு குறைபாடு போன்றவை பல்வேறு உடல் நலக் கோளாறை ஏற்படுத்தும் தொடர்புடையது.

ஆய்வின் மூலம் அனைத்து வகையான சானிட்டரி நாப்கின்களிலும், ஆர்கானிக் மற்றும் கனிமங்கள், பித்தலேட்டுகள் உள்ளதா என சோதிக்கப்பட்டது. டி.ஐ.டி.பி. எனப்படும் ஒருவகை பித்தலேட்டுகள் கிலோவுக்கு 19,460 மைக்ரோ கிராம் அளவுக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் செறிவு முறையே ஒரு கரிம மற்றும்கனிம மாதிரியில் 0.0321 மற்றும் 0.0224 கிராம் அளவில் உள்ளது தெரியவந்துள்ளது. இது ஐரோப்பிய யூனியன்களில் உள்ள கட்டாயப்படுத்தப்பட்ட உற்பத்தியைக் காட்டிலும் 0.1 சதவீதம் அதிகம்.

இந்தியாவில் 100க்கு 64.4 சதவீதம் பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துகின்றனர். 49 சதவீதம் பேர் துணியை பயன்படுத்துகின்றனர். 15 சதவீதம் பேர் உள்ளூரில் தயாரிக்கப்படும் நாப்கீன்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 0.3 சதவீதம் பேர் மென்ஸ்ட்ருவல் கப் எனப்படும் சாதனத்தை பயன்படுத்துகின்றனர்.

இதில் மற்றொரு சோகம் என்னவென்றால்? ஆர்கானிக் என்ற பெயரை கேட்டாலே அனைவரும் சிறந்த பொருள் என்று அதைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்த சோதனையின் முடிவு ஆர்கானிக் பாதுகாப்பானது என்பதை உடைத்தெறிந்திருக்கின்றது. ஆர்கானிக் என வெளிவரும் பொருட்களில் கூட நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

Official Announcement: மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ அதிரடி நீக்கம்..!!

Wed Nov 23 , 2022
பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு, இரண்டு ஆண்டுகள் தனது அணிக்காக விளையாட ரொனால்டோவுடன் மான்செஸ்டர் யுனைட்டெட் ஒப்பந்தம் செய்து கொண்டது. நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ரொனால்டோ […]

You May Like