சில ஆண்டுகளாகவே செயற்கையான கருத்தரித்தமுறையில் குழந்தைபெற்றுக்கொள்கின்றனர். இதற்கு காரணம் நமது வாழ்வியல் மாற்றங்களாகக்கூட இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீப காலங்களில் பெண்கள் கருவுறுவதே பிரச்சனையாகின்றது. அதிக அளவிலான பெண்களுக்கு காரணமே இல்லாமல் கருக்கலைப்பு நிகழ்கின்றது. கர்ப்பப்பை வலுவற்று இருப்பது போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஜார்னல் ஃபிராண்ட் பப்ளிக் ஹெல்த் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் கருத்தரிப்பதற்கும், கரு ஆரோக்கியமாக இருப்பதற்கும் அவர்களின் உணவு முறை முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது.
சர்க்கரை, ஆல்கஹால், டைரி ப்ராடக்டுகள், கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவு பொருட்கள் ஆகியவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக தெரியவந்துள்ளது. சில உணவுகள் ஊட்டச்சத்து மிகுந்தவையாக இருந்தாலும் அவை கருவறுதலுக்கு தடையாக அமைகிறது. அந்த வகையில் எந்தெந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
கார்போஹைட்ரேட்: உடலுக்கு கெடுதல் செய்யக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உடைய அரிசி, மைதா மற்றும் கோதுமை ஆகியவற்றை கர்ப்ப காலங்களில் அல்லது கருவுறுவதற்கு முயற்சி செய்வோர் தவிர்க்க வேண்டும்.
டைரி டைரி ப்ராடக்டுகள் : குறைந்த கொழுப்பு உடைய டைரி ப்ராடக்டுகள், கால்சியம் மற்றும் உடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களை அதிக அளவில் கொண்டுள்ளது. ஆனாலும் அதில் ஆண்ட்ரோஜன் மற்றும் டெஸ்ட்ரோஸ்டோன் ஆகியவற்றை அதிகரிக்கும் மூலக்கூறுகள் உள்ளன. டெஸ்ட்ரோஸ்டோன் அதிகரித்தால் அவை உடலின் சமநிலையை பாதிக்கக்கூடும். எனவே ஆடை நீக்கிய பாலை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
செயற்கை இனிப்பு : தற்போது அதிக அளவில் செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் உணவு பொருட்களில் சேர்க்கப்பட்டு வருகின்றன. சாக்லேட்டுகளிலும் மிட்டாய்களிலும் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் சர்க்கரையற்ற பொருள்களிலும் சர்கரைக்கு பதிலாக இந்த செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயற்கை இனிப்புகளானது டிஎன்ஏ-வை பாதித்து கருவுறுதலிலும் பிரச்சனையை உண்டாக்கும்.
கொழுப்பு சத்து உடைய உணவுகள் : ஜங்க் ஃபுட்டுகள் எனப்படும் உடலுக்கு ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகள் பலவும் உடலுக்கு தீமை செய்யக்கூடிய கொழுப்புகளை உள்ளடக்கியுள்ளன. மேலும் இவை ரத்த நாளங்களை சேதப்படுத்தி இனப்பெருக்க உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். முக்கியமாக எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட எந்த உணவையும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொறிக்கப்படாத சில உணவுகளிலும் இந்த கொழுப்புகள் அதிகமாக உள்ளன. உதாரணத்திற்கு மைக்ரோவேவில் சமைக்கப்பட்ட பாப்கார்ன், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடலுக்கு தீமை விளைவிக்கும்.
மெர்குரி நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் : கருத்தரிப்பிற்கு முயற்சி செய்யும் போதோ, அல்லது கர்ப்ப காலத்தின் போது கடலில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. முக்கியமாக பாதரசம் அதிக அளவில் இருக்கும் சில மீன் வகைகள் மற்றும், கடல் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு பதிலாக சால்மோன் எனப்படும் மீனை உண்ணலாம். இதில் மெர்குரி குறைவாகவும் உடலுக்கு நன்மை தரக்கூடிய மற்றும் புரதங்கள் அதிகமாகவும் இருக்கின்றன.
பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்பட்ட உணவை உட்கொள்வது : இன்று காலங்களில் விவசாயத்தில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு விளைவிக்கப்படும் காய்கறிகள் உடலுக்கு மிகவும் தீங்கை விளைவிக்கின்றன. முக்கியமாக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட காய்கறிகளை உட்கொள்ளும் பெண்களுக்கு, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை உண்ணும் பெண்களை விட கருவுறும் வாய்ப்பு 26 சதவீதம் குறைவாக உள்ளதாகவே ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களையும் காய்கறிகளையும் உண்ண வேண்டும். மேலும் கருவுற முயற்சிப்பவர்களும் அல்லது கர்ப்ப காலத்தில் போதும் வாட்டர் பாட்டில்களில் அடைக்கப்பட்ட நீரையோ அல்லது குளிர்பானங்களையோ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.