அழகாக சருமம் பொலிவாகவும், சுருக்கம் மற்றும் சரும நிறத்தையும் மேம்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும். இந்த செயலுக்கு உதவும் மைசூர் பருப்பு பற்றியும் அதனை உபயோகிக்கும் முறை பற்றியும் காண்போம்.
தளர்ந்த சருமத்தினை இறுக்கமாக்க வைத்திருக்க நினைப்பவர்கள் இதனை பின்பற்றி பார்க்கலாம். மசூர் பருப்பினை எடுத்து பொடி செய்து, அதனுடன் பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் போன்ற பக்குவத்தில் முகத்தில் தடவ வேண்டும். மேலும் நன்கு காய்ந்த நிலையில், குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் இறுக்கமாக்கவும், பொலிவுடனும் காணப்படும்.
முகத்தில முகப்பரு அதிகமாக வருகின்றவர்கள் இதனை பின்பற்றி பார்க்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் மசூர் பருப்பு பொடியை எடுத்து கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தினை கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
சருமம் எப்போதும் முதுமை மாறி இளமையாக இருக்க வேண்டுமென்றால் இதனை பின்பற்றி பார்க்கலாம். மசூர் பருப்பினை எடுத்து கொண்டு அதனுடன் கடலை மாவை சமஅளவில் எடுத்து காய்ச்சாத சுத்தமான பசும் சிறிது சேர்த்து பாலை சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ள வேண்டும். அதனை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.