Silent killer என்று குறிப்பிடப்படும், உயர் ரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் பொதுவான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாகும்.. தமனி சுவர்களில் இரத்தத்தால் செலுத்தப்படும் உயர்ந்த அளவு அழுத்தமே உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.. 30 முதல் 79 வயதுக்குட்பட்ட சுமார் 1.28 பில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது..
ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தங்கள் உணவில் சில வகையான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.. ஆம்.. உணவை மாற்றுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகளை பற்றி பார்க்கலாம்..
ப்ரோக்கோலி: ப்ரோக்கோலியில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது இரத்த நாளங்களின் செயல்பாடு மற்றும் உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள்: அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இந்த பழங்கள் அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
சியா விதைகள்: சியா விதைகள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும். ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை சீராக்க தேவையான பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபைபர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பூண்டு : ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டு சிறந்த உணவாக கருதப்படுகிறது.. பூண்டை சமைத்து சாப்பிடுவதால் அதன் பண்புகள் அழிக்கப்படுகின்றன. எனவே, பூண்டை வெட்டி நேரடியாக உட்கொள்ளலாம். ஆனால் பச்சையாக பூண்டு பிடிக்கவில்லை என்றால் அதை உங்கள் உணவில் சேர்த்து சாப்பிடலாம். நமது உடலின் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் பூண்டு உதவுகிறது.
வாழைப்பழம் : தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். வாழைப்பழத்தில் குறிப்பிடத்தக்க அளவு பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. உண்மையில் பொட்டாசியம் நம் இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த நாளங்களில் உருவாகும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
உங்கள் ரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சில பயனுள்ள வழிகள் :
- உட்கார்ந்து கொண்டே இருப்பதை தவிர்க்கவும் மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடவும்.
- யோகா, தியானம், அரோமாதெரபி போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களைப் பயிற்சி செய்யுங்கள்.
- பழங்கள், காய்கறிகள், பருப்புகள், முழு தானியங்கள், கோழி இறைச்சி போன்றவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமான மற்றும் சீரான உணவைப் பின்பற்றுங்கள். அதிகப்படியான உப்பு, சர்க்கரை அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- உங்கள் உணவுக் கட்டுப்பாடுகள், மருந்துகள் மற்றும் பிற உடல்நலத் தேவைகள் ஆகியவற்றைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க உங்கள் மருத்துவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்..