fbpx

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள்? வாங்க விரிவாக பார்க்கலாம்…

ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ என்றும் ‘சப் போடில்லா’ என்றும் கூறுவர். வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்பு உண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.

சப்போட்டாவில்  உள்ள சத்துகள் மற்றும் பயன்கள்

வைட்டமின் சி மற்றும் ஏ,  நார்சத்து,  புரோட்டின் , இரும்புசத்து,  கால்சியம்,  பாஸ்பரஸ் போன்ற சத்துகள்  சப்போட்டா  பழத்தில் நிறைந்துள்ளன. சப்போட்டா பழத்தில்  வைட்டமின் ஏ அதிக  அளவு நிரம்பி உள்ளதால் நமது கண்களுக்கு நன்மை தருவதுடன்  முதுமையை  தள்ளிப்போட  வல்லது. நாம்  சுறுசுறுப்பாக  நடந்து செல்ல நமக்கு மிகவும்  அவசியமாக இருப்பது  ஆற்றல். அந்த ஆற்றலை  அதிகளவு  கொண்டுள்ளது சப்போட்டா  பழம்.  ஏனெனில்  உடலுக்கு  தேவையான  ஆற்றலை  வழங்கும்  குளுக்கோஸை  கொண்டுள்ளது. பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்  புற்றுநோய்க்கு எதிரான  பாதுகாப்பை  வழங்குகிறது. அதாவது  வாய் குழி  புற்றுநோய்,  பெருங்குடல் சளி  சவ்வை  நச்சுகளிடமிருந்து  பாதுகாக்க  வைட்டமின் ஏ-வை  கொண்டு  பாதுகாப்பு  வழங்குகிறது.சப்போட்டா  பழத்தை உண்ட பின்,  ஒரு தேக்கரண்டி  சீரகத்தை  நன்கு மென்று  விழுங்கினால் பித்தம் விலகும்.  பித்தத்தை குணப்படுத்தும் சிறந்த மருந்தாக  இது உதவுகிறது. மருத்துவப் பயன்கள் என்ன

சப்போட்டா பழத்தை  அரைத்துச் சாற்றை தேனில்  கலந்து சாப்பிட்டு  வந்தால் வயிறு  சம்பந்தப்பட்ட  கோளாறுகள், வயிற்றுவலி ஆகியவை  குணமாகும். சப்போட்டா  பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக  நறுக்கி இவற்றை  ஒன்றாகக்  கலந்து அரைத்து  பஞ்சாமிர்தம்  செய்து சாப்பிட உடலுக்கு  வலிமையும் உறுதியையும் தரும். சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து  48 நாட்கள்  சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல்,  வயிற்றுவலி,  வயிற்றெரிச்சல் இவற்றைப்  போக்கும்.சப்போட்டா  பழத்தைத் தோல் நீக்கி,  அத்துடன் பால் சேர்த்து  அரைத்துச் சாப்பிட்டு வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.சப்போட்டா பழத்திலுள்ள  சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களைச் சீராக  வைக்கும் குணம்  கொண்டவை.  இவை, ரத்தநாளங்களில்   கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகிறது.

Kokila

Next Post

மாஸாக என்ட்ரி கொடுத்த "தளபதி" களைகட்டும் வாரிசு ஆடியோ லான்ச்..! வீடியோ..

Sat Dec 24 , 2022
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். முதலில் இந்த படத்திற்கு ஆந்திராவில் திரையங்குகள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் தோன்றி மறைந்தது, பிறகு தமிழகத்தில் அதே பிரச்சனை பூதாகரமாக வெடித்து தற்போது அதுவும் சரியாகி, 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் […]

You May Like