எல்லாம் உஷார்..‌.!சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை…!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் .

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது, 7-ம் தேதி புயலாக வலுப்பெற்றது. புதிதாக உருவான புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே இன்று நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.


இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

உங்க ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க வேண்டுமா...? நாளை நடைபெறும் முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க...

Fri Dec 9 , 2022
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக நாளை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை தொடர்பான புகார்கள் குறைகளை தீர்க்க தமிழக அரசு ஒவ்வொரு வட்டத்தில் குறைதீர் முகாம்கள் நடத்தபடுமென அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள மக்கள் வரும் 10ம் தேதி மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி […]
Ration Card

You May Like