Rain Alert: தமிழகத்தில் இன்று கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை..!

rain 2025 2

தமிழகத்தில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 27-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 24-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தனி நாடான பாலஸ்தீனம்!. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடாவுக்கு சவால் விட்ட நெதன்யாகு!.

Mon Sep 22 , 2025
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகியா நாடுகள் அறிவித்துள்ளதால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடுமையான கோபத்தில் உள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த போரில் காசாவை சேர்ந்த பாலஸ்தீன மக்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனா். மேலும் அவர்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதற்கு இஸ்ரேலின் […]
netanyahu israel pm 11zon

You May Like