ஆரஞ்சு அலர்ட்… இந்த 12 மாவட்டத்தில் இன்று கனமழை…! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்…!

rain 1

திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தெற்கு ஒடிசா– வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35.6 முதல் 37.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Apple ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்!. அற்புதமான தோற்றம், அம்சங்கள், விலை முழுவிவரம் இதோ!

Wed Sep 10 , 2025
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் வெளியிடப்பட்டது. இந்த சீரிஸில் நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் பல சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. இது நேற்று இரவு இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் […]
iphone 17 series

You May Like