சென்னையை மிரட்டும் கனமழை..!! வாகன ஓட்டிகள் தவிப்பு..!! இதுவரை 2 பேர் உயிரிழப்பு..!!

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சராசரியாக பல இடங்களில் 7-8 செ.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நீச்சல் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை, அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையை மிரட்டும் கனமழை..!! வாகன ஓட்டிகள் தவிப்பு..!! இதுவரை 2 பேர் உயிரிழப்பு..!!

தொடர் மழையால் கிண்டி – கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எழும்பூர் தமிழ் சாலை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையை மிரட்டும் கனமழை..!! வாகன ஓட்டிகள் தவிப்பு..!! இதுவரை 2 பேர் உயிரிழப்பு..!!

சென்னை மழைக்கு இருவர் உயிரிழந்து உள்ளனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்து உள்ளார். மேலும், வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. கனமழையால் 25 இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஒரே ராத்திரியில் விறுவிறுப்பான பணிகள்… மோசமாக இருந்த மருத்துவமனை பளிச் பளிச்!!

Tue Nov 1 , 2022
குஜராத்தில் பிரதமர் நரேந்திரமோடி வருகையை ஒட்டி மருத்துவமனையில் ஒரே ராத்திரியில் மருத்துவமனையை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பளபளவென மாற்றியுள்ளனர். குஜராத்தின் மோர்பி பகுதியில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 141 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பா.ஜ.க. எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தனர். 170க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில்சந்திக்க வருகை தருகின்றார். […]

You May Like