3 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

cyclone rain 2025

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் 19-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 20, 21 தேதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 16-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 17-ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், 18-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மரண மாஸ்!. 32 பந்துகளில் அதிவேக சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி!. UAE அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபாரம்!.

Sat Nov 15 , 2025
‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை 7 வது சீசனில் 32 பந்துகளில் அதிவேகமாக சதமடித்த வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் 148 ரன்கள் வித்தியாசத்தில் UAE அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி வெற்றிபெற்றுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில், இளம் வீரர்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை (‘டி-20’) 7வது சீசன் நடக்கிறது. இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள், இரு […]
Asia Cup Rising Stars india a team

You May Like