இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..! வானிலை மையம் அலர்ட்..!

Rain 2025

நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.. டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.. அதே போல் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் வெப்பம் தகித்து வருகிறது.. பல இடங்களில் வெயில் சதமடித்து வருவதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.. எனினும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் ஜூன் 04 ஆம் தேதி வாக்கில் துவங்க வாய்ப்புள்ளது. சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழகம் வரை விதர்பா, தெலங்கானா மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

03-06-2026 மற்றும் 04-06-2026: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்..

05-06-2026: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

06-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

07-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

08-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : “தீர்ந்துபோன சக்தி.. அதிமுகவை காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர்..” இபிஎஸ் விமர்சனத்திற்கு தவெக பதிலடி..!

English Summary

The Meteorological Department has stated that heavy rains are likely in Tamil Nadu from today until the 8th.

RUPA

Next Post

கவனம்..! எபோலா வைரஸின் எச்சரிக்கை அறிகுறிகள் இவைதான்.. இவற்றை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது..!

Wed Jun 3 , 2026
எபோலா வைரஸ் நோய் (EVD) என்பது அரிதான, ஆனால் மிகவும் தீவிரமான மற்றும் உயிரைப் பறிக்கக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம், வாந்தி, உமிழ்நீர், வியர்வை அல்லது பிற உடல் திரவங்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம் இந்நோய் பரவக்கூடும். இதனால்தான் விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவை மிகவும் முக்கியமானவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், நோயின் […]
ebola virus 2

You May Like