நாளை 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..! வானிலை மையம் வார்னிங்..!

rain

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களிலும், நாளை 9 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகம் – இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது.

24-01-2026: வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

25-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

26-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

24-01-2026 முதல் 26-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.

24-01-2026 முதல் 26-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (24-01-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (25-01-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Breaking : ஷாக்..! 2 முறை உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த தங்கம், வெள்ளி விலை ரூ.20,000 அதிகரிப்பு..!

RUPA

Next Post

போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..! சினிமா பாணியில் நடந்த தாக்குதல்..! பெரம்பலூரில் பரபரப்பு..!

Sat Jan 24 , 2026
பெரம்பலூர், திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த போது மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.. இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 2 போலீசார் படு காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.. […]
police rowdy attack

You May Like