Helmet | வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!! இனி ஹெல்மெட் அணியும்போது இந்த தவறை செய்தால் அபராதம்..!! அதிரடி அறிவிப்பு..!!

சமீப காலமாக சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வர போக்குவரத்து போலீசார், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினாலும், ரூ.2,000 விதிக்கப்படும் என்று புதிய விதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிந்து அதன் ஸ்ட்ரீப் அணியாமல் சென்றால், ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், ஓட்டுநர்கள் பிஐஎஸ் அங்கீகாரம் இல்லாத அல்லது குறைபாடுகளுடன் மட்டுமே அணிந்தால் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டதன் நோக்கம் இரண்டு சக்கர வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும்போது, ஓட்டுனர்கள் தரமான ஹெல்மெட் அணிந்திருந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பதே ஆகும். போக்குவரத்துத் துறையின் இந்த முயற்சி பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More : Election | ’இப்படியெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது’..!! அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!!

Chella

Next Post

Lok Sabha | ”84 வயதுக்குட்பட்டோர் தபால் வாக்களிக்க முடியாது”..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

Sat Mar 2 , 2024
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதனால் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தரப்பில் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டு, அவரவர்களின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனர். இந்நிலையில் தான், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தபால் […]

You May Like