பண்டிகை காலங்களில் நம்மில் பலரும் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து வைப்போம்.. இது நம் கைகளுக்கு அழகான சிவப்பு நிறத்தை வழங்குகிறது.. நமக்கு எளிதாக கிடைக்கும் மருதாணி இலைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.. உடல் வெப்பத்தைக் குறைத்தல், புண்களை ஆற்றும் பண்பு, மற்றும் நகச்சுத்தி போன்ற நோய்களைத் தடுக்கும் திறன் ஆகியவை அடங்கும். மேலும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் இது பலனளிக்கிறது.
இந்த நிலையில் மருதாணி கல்லீரல் நோய்களையும் குணப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பானின் ஓசாகா மெட்ரோப்பாலிடன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், மருதாணியில் உள்ள லாஸோன் (Lawsone) என்ற நிறப்பொருள் கல்லீரல் ஃபைப்ரோசிஸ்” என்ற நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.
கல்லீரல் ஃபைப்ரோசிஸ் என்றால் என்ன?
கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் என்பது கல்லீரலில் வடு திசுக்கள் உருவாகும் ஒரு நிலை ஆகும்.. கல்லீரலில் நீண்டகால அழுகல் அல்லது காயம் ஏற்பட்டால், அங்கு அதிக நார்ச்சிசு (fibrous scar tissue) உருவாகிறது. இதுவே லிவர் ஃபைப்ரோசிஸ்.
இது சிரோசிஸ் (cirrhosis), கல்லீரல் கோளாறு, அல்லது கல்லீரல் புற்றுநோய் போன்ற ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
உலகளவில் சுமார் 3–4% மக்களுக்கு இந்த நோயின் தீவிரமான வடிவம் உள்ளது என்றும், ஆனால் இதற்கான சிறந்த சிகிச்சைகள் இதுவரை குறைவாகவே உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..
ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?
ஓசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கல்லீரல் செயல்பாட்டை பராமரிக்கும் Hepatic Stellate Cells (HSCs) மீது நேரடியாகச் செயல்படும் பொருட்களை கண்டறிய ஒரு ரசாயன பரிசோதனை அமைப்பு (chemical screening system) உருவாக்கினர். இந்த முறையில், அவர்கள் Lawsone என்ற நிறப்பொருள் HSC செல்களின் செயல்பாட்டைத் தடுக்கக்கூடியது என்பதை கண்டுபிடித்தனர்.
Lawsone பொருளை எலிகளில் (mice) சோதித்தபோது, YAP, αSMA, COL1A போன்ற ஃபைப்ரோசிஸ் குறியீடுகள் குறைந்தன என்றும், cytoglobin என்ற எதிர்-ஆக்ஸிடேண்ட் குறியீடு உயர்ந்ததாகவும் கண்டனர். அதாவது நோயால் பாதிக்கப்பட்ட செல்கள் மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பத் தொடங்கியதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்..
மருந்து உருவாக்கும் திட்டம்
டாக்டர் அட்சுகோ டைகோகு, ஓசாகா மெட்ரோப்பாலிடன் பல்கலைக்கழகம் மருத்துவப் பிரிவு இதுகுறித்து பேசிய போது “ Lawsone அடிப்படையில் மருந்துகளை உருவாக்கி, ஃபைப்ரோசிஸ் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும்.. தற்போது HSC செல்களுக்கே நேரடியாக மருந்தை எடுத்துச் செல்லும் ‘டிரக் டெலிவரி சிஸ்டம்’ ஒன்றை உருவாக்கி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் “இது வெறும் கட்டுப்பாட்டை மட்டுமல்ல.. நோயின் பாதிப்பை மீண்டும் திருப்பவும் முடியும்.” என்றூம் அவர் கூறியுள்ளார்..
கல்லீரல் ஃபைப்ரோசிஸ் — அறிகுறிகள்
இந்த நோயின் ஆரம்ப நிலையிலே பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் தெரியாது.
நோய் தீவிரமடையும் போது மட்டுமே சில அறிகுறிகள் வெளிப்படலாம்:
உணர்ச்சி இழப்பு
உடல் பலவீனம்
வாந்தி, வாந்தி உணர்வு
வயிற்றிலும் கால்களிலும் நீர் சேர்தல்
மஞ்சள் காமாலை (Jaundice)
மனக்குழப்பம், நினைவிழப்பு
காரணமின்றி உடல் எடைக் குறைதல்
காரணங்கள்
மதுபானம் அதிகம் அருந்துவது (Alcoholic Liver Disease)
மதுவில்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (Non-Alcoholic Fatty Liver Disease – NAFLD)
இவை இரண்டு முக்கிய காரணங்கள்.
மேலும், கீழ்க்கண்ட நோய்களும் ஃபைப்ரோசிஸ் உருவாக காரணமாகலாம்:
ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ் (Autoimmune Hepatitis)
பித்தநீர் அடைப்பு (Biliary Obstruction)
இரும்புச் சத்து அதிகமாக இருத்தல் (Iron Overload)
மது அருந்தாத கொழுப்பு கல்லீரல் நோய் (Non-alcoholic fatty liver disease)
வைரல் ஹெபடைடிஸ் பி மற்றும் சி (Viral Hepatitis B மற்றும் C)
மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோய்
இயற்கை மூலிகையான மருதாணி (Lawsonia inermis) இப்படி மருத்துவ ரீதியிலும் பெரிய முன்னேற்றம் காண்பது விஞ்ஞான உலகில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
Read More : அடிக்கடி கண்ணாடி பார்க்கும் பழக்கம் ஒரு நோயின் அறிகுறி தெரியுமா..? – எச்சரிக்கும் நிபுணர்கள்..!



