வரலாற்று சிறப்பு மிக்க செஸ் ஒலிம்பியாட்.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்…

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..

சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 2.500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 6 அணிகளில் 30 வீரர்களை இந்தியா களமிறக்குகிறது.. மாமல்லபுரம் அருகே கண்கவர் விளையாட்டு அரங்கில் இந்த போட்டியை நடத்த தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது..

இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.. இன்று மதியம் மதியம் 2.20-க்கு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து விமானப்படை விமானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார்.. பின்னர் அங்கிருக்கும் ஓய்வறையில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, 5.25 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 5.45 மணிக்கு அடையாறில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார்..

அங்கிருந்து சாலை வழியாக நேரு உள்விளையாட்டரங்கிற்கு செல்லும் மோடி, மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை தொடங்கி வைக்கிறார்.. பின்னர் இரவு 7.35 மணிக்கு காரில் பயணம் மேற்கொண்டு, 7.50க்கு மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.. அப்போது முக்கிய பிரமுகர்கள் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.. அன்றிரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கும் பிரதமர், 29-ம் தேதி காலை 9.55-க்கு புறப்பட்டு சாலை வழியாக காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்..

42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு காலை 11.35 மணிக்கு காரில் புறப்பட்டு 11.50-க்கு சென்னை விமான நிலையம் செல்கிறார்.. 11.55 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் புறப்படும் மோடி, மதியம் 2.15 மணிக்கு குஜராத் திரும்புகிறார்..

இன்று நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து மோடி உரையாற்றுகிறார். இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மோடியின் வருகையையொட்டி விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கு உள்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Maha

Next Post

மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது ஆபத்தா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..?

Thu Jul 28 , 2022
சில உணவுகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை, முரண்பட்ட உணவு வகைகளால் உணவு விஷம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சில உணவுகளை ஒன்றாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ சாப்பிடக் கூடாது. இவற்றில் மீனும் பாலும் முதன்மையானவை. மீனையும் பாலையும் சேர்த்து சாப்பிடக் கூடாது அல்லது மீன் சாப்பிட்டுவிட்டு பால் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.. மீனையும் பாலையும் ஒன்றாகச் சாப்பிடுவதால் […]
’மார்பக புற்றுநோயை இப்படியும் தடுக்கலாம்’..!! ’இந்த உணவுகளையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்’..!

You May Like