மத்திய அரசு வேலைவாய்ப்பு! ஹெச் எல் எல் லைஃப் கேர் பிரைவேட் லிமிடெட்டில் பட்டதாரிகளுக்கு ₹1,15000/- ரூபாய் சம்பளம் வரையில் வேலைவாய்ப்பு !

ஹெச்.எல்.எல் லைஃப் கேர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஹெச்.எல்.எல்
லைஃப் கேர் லிமிடெட் நிறுவனத்தில் ரீஜனல் மேனேஜர் மற்றும் டேபியூட்டி மேனேஜர் பணிகளுக்கு 8 காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக பி.எஸ்.சி/ பி.ஃபார்ம்/
பி.இ/ பி.டெக்/ எம் .பி.ஏ/ எம்.எஸ்.டபுள்யு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 40 ஆகும் . இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.29,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைவாய்ப்பில் சேர தகுதியும் விருப்பமும் உடையவர்கள் ஹெச்.எல்.எல் லைஃப் கேர் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 18.04.2023 ஆகும். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பெரு தகவல்களை அறிய lifecarehll.com என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

1newsnationuser5

Next Post

Diploma படித்தவரா நீங்கள்?... மத்திய பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!... மாதம் ரூ.55,000 சம்பளம்!... விவரம் உள்ளே!

Sun Apr 9 , 2023
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-வில் Civilian Medical Officer காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS/ Degree / PG Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் […]
drdo job 2

You May Like