”தூக்கிட்டாங்க சார் தூக்கிட்டாங்க”..!! கனவில் கொள்ளைபோன நகைக்கு நிஜத்தில் புகார் அளித்த தம்பதி..!!

சென்னை எம்ஜிஆர் நகர் புகழேந்தி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (36). இவரும் இவரது மனைவியும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து பீரோவில் இருந்த 130 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், பீரோவை சோதனை செய்தபோது திருடுபோனதாக புகார் கொடுக்கப்பட்ட 130 சவரன் நகைகளும் பீரோவில் பத்திரமாக இருந்தது. இதனைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார், தம்பதியினரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

அதில், நேற்று தம்பதியினர் இருவரும் தனித்தனி அறையில் தூங்க சென்றுள்ளனர். சரியாக 12.30 மணியளவில் வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டுள்ளது. மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் சாவி இருந்த நிலையில், கதவு திறந்து கிடந்ததால் பதற்றத்தில் தேடி பார்த்த போது 130 சவரன் நகையை காணவில்லை என நினைத்து புகார் அளித்ததாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு மனமுடைந்த போலீசார், தம்பதியினருக்கு அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். காலை முதலே பலரையும் பதற்றத்தில் ஆழ்த்திய தம்பதி வீட்டுக்குள்ளேயே நகையை வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

'ப்ளீஸ் சார்...' என்று கெஞ்சிய மாணவன்! தண்டனையை நிறுத்தாத ஆசிரியர்!

Sun Feb 12 , 2023
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈவு இரக்கமில்லாமல் கணித ஆசிரியர் கொடுத்த  தண்டனையால் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காரைக்குடியைச் சார்ந்த  இளையராஜா மற்றும் பாசமலர் தம்பதியின் ஒரே மகன் கவிப்பிரியன்  வயது 13. இந்தச் சிறுவன் அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக  இருந்து […]

You May Like