கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஸ்ரீமதி, தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி கயல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி நண்பர்களாக இருந்த இருவருக்கும் பின்னர் நெருக்கமான தொடர்பு உருவாகி இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் ஸ்ரீமதியின் அண்ணனுக்கு தெரியவரவே, குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கூறி தனது ஓரின சேர்க்கையை கைவிடுமாறு ஸ்ரீமதிக்கு வலியுறுத்தியுள்ளார். இதனால் ஸ்ரீமதியும் கயலுடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் மனவருத்தமடைந்த கயல், “தன்னுடன் பேசாவிட்டால் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன்” என்று ஸ்ரீமதியை மிரட்டியுள்ளார்.
இதனால் மனஅழுத்தமடைந்த ஸ்ரீமதி, தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஸ்ரீமதி எழுதியிருந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு கயலே காரணம் என குறிப்பிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அந்த கடிதத்தில், “அம்மா எல்லாரும் எனக்கு தப்பான பட்டம் கட்டுனாங்க.. நா என்னமா பன்ன.. நா போனதுக்கு பிறகு நீ அழாத.. நீ ஹேப்பியா இருக்கனும். நலா சாப்பிடு.. அண்ணன பாத்துக்கோ.. அம்மா கயல் உன்ன பத்தியும் என்ன பத்தியும் தப்பா சொல்லுச்சு.. என் சாவுக்கு கயல் தான் காரணம்.. கயல சும்மா விடாத அம்மா.. என்ன தப்பு தப்பா பேசுச்சு..எனக்கு அசிங்கம் தாங்க முடியல.. யாரையும் விடாத அம்மா..” என கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் கயல் என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரினச் சேர்க்கையின்போது ஒன்றாக இருந்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி தோழி மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: எல்லைப் பாதுகாப்பு படையில் 1,121 காலிப்பணியிடங்கள்.. ரூ.81,700 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..