மார்கெட்டையே காலி செய்யப்போகும் ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர்..!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் டூவீலர் விற்பனையை செய்து வருகிறது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் பெட்ரோல் ஸ்கூட்டராக இருக்கிறது.


இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது பிராண்டில் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான டீசரை தற்போது வெளியிட்டுள்ளது அந்த டீசரில் ஸ்கூட்டரின் முன்பக்க ஹெட்லைட் டூம் பகுதி மட்டும் இருப்பது போல காட்சியளிக்கிறது. இதில் இது குறித்து அப்டேட்டுக்காக காத்திருங்கள் என்ற வாசகமும் இருக்கிறது. இந்த ஹெட்லைட் டுமை பார்க்கும்போது இது ஹோண்டா டியோ ஸ்கூட்டருக்கான டீசர் என்பது போல தெரிகிறது. ஹோண்டா நிறுவனம் டியோ 125 ஸ்கூட்டரை வெளியிடும் முடிவில் இருந்து வருவதாக இதற்கு முன்பு செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டரை அறிமுகத்தை தான் ஹோண்டா செய்யப் போவதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து ஹோண்டா நிறுவனம் எந்த வித தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே டியோ 110 ஸ்கூட்டர் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது டியோ 125 ஸ்கூட்டரில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. முக்கியமாக இந்த இரு ஸ்கூட்டர்களையும் பிரித்து பார்க்கும் வகையில் கலர் ஸ்கீம்கள் மாற்றப்படும் மேலும் 125 சிசிக்கான பேட்ஜிங்கும் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதன் இஞ்ஜினை பொருத்தவரை ஆக்டிவா 125 மற்றும் கிரேசியா 125 ஆகிய ஸ்கூட்டர்களில் உள்ள அதே 123.9 சிசி ஏர்கூல்டு இன்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இது 8.18பிஎச்பி பவரையும் 10.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் பங்க்ஷனை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஹோண்டாவின் ஹச் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் படி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி லைட்டிங், ஸ்டாண்ட் கட் ஆப், பாஸ் ஸ்விட்ச் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். ஆக மொத்தத்தில் ஆக்டிவாவின் மார்க்கெட்டை இந்த டியோ 125 காலி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தற்போது ஹோண்டா நிறுவனம் புதிய 350 சிசி பைக்கை தயார் செய்து வருகிறது.

1newsnationuser1

Next Post

ஊரே ரீல்ஸ் செய்யும் ‘காவாலா’.. தமன்னாவின் கலக்கல் நடனம்..!

Sat Jul 8 , 2023
தமன்னா நடனத்துடன் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் நேற்று முன் தினம் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான காவாலா பாடலின் ப்ரொமோ வீடியோ கடந்த ஜூன் 03ஆம் தேதி வெளியானது.   தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் பாடலின் ப்ரொமோ வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி கலக்கல் ஹிட் அடித்து இணையத்தை வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்தப்  பாடலில் […]
download 11

You May Like