காணும் பொங்கல் அன்று, மெரினா கடற்கரை சாலையில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டது சென்னை போக்குவரத்து காவல்துறை. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 17/01/2024 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காமராஜர் சாலையில் […]

சேலம் மாவட்டத்தில் சுற்றுலா தொழில் நடத்துபவர்கள் சுற்றுலா இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் “சுற்றுலா வழிகாட்டிகள் (Tour Guides), சுற்றுலா பயணம் ஏற்பாட்டாளர்கள் (Tour Agents), சுற்றுலா முகவர்கள் )Travel Agents) சுற்றுலா போக்குவரத்து துறை ஏற்பாட்டளர்கள் (Tourist Transport Operators)” ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி […]

சென்னையில் வேக கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாட்டை நிர்ணயிக்க, காவல்துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, பாதுகாப்பு, வேகமாக பயணிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பியது. குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வேக கட்டுப்பாடு நடைமுறை நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. நகர போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பு […]

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை டிஜிபி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; வாகன தணிக்கையின் போது வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்த பிறகு வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும். வாகன தணிக்கையின் போது வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தாமல் மீறி செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து விரட்டிச்செல்ல வேண்டாம். அடுத்த […]

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலையை இன்னும் சில வாரங்களுக்கு தொடரவுள்ளதாக அறிவித்து உள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியது. கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின், கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஓலா துவங்கியுள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்ட […]

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் டூவீலர் விற்பனையை செய்து வருகிறது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் பெட்ரோல் ஸ்கூட்டராக இருக்கிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது பிராண்டில் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான டீசரை தற்போது வெளியிட்டுள்ளது அந்த டீசரில் ஸ்கூட்டரின் முன்பக்க ஹெட்லைட் டூம் பகுதி மட்டும் இருப்பது போல காட்சியளிக்கிறது. இதில் இது குறித்து […]

இந்தியாவில் தன்னுடைய முதல் தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஐ-கோவைஸ் மொபிலிட்டி (iGowise Mobility) நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் அதன் முதல் வாகனத்தை தயாரிப்பதற்கான அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. ஐ-கோவைஸ் மொபிலிட்டி நிறுவனம் தன்னுடைய முதல் தயாரிப்பாக இ-பைக் ரக பெய்கோ எக்ஸ்4 (BeiGo […]

மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் காரணமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன்  இவற்றை வாங்குவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனச் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் அதிவேக மின்சார வாகனப்பயன்பாட்டுக்கு நாடு முன்னேறிச் செல்லும் என்பதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை சுமார் ஒரு ஜிகா டன் அளவுக்கு […]

தமிழகம் முழுவதும் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12.47 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு சாலை போக்குவரத்து வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.1 லட்சம் வரையிலான வண்டிகளுக்கு 10% வரியும், ரூ.1லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு 12% வரியும் விதிக்கப்பட உள்ளது. 5 லட்சத்திற்கு குறைவான கார்களுக்கு […]

சாலைப்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு இலக்காகும் இடங்களை கண்டறிந்து, குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்தி அவற்றைக் குறைப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர்களுக்கு, விபத்துக்கு உள்ளாகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் விபத்து நடக்காமல் தடுக்கும்வகையில் தலா ரூ.10 லட்சம் செலவில் நடவடிக்கைகளை எடுக்க இந்த இயக்குநர்கள் […]