கொடூரம்..! லஞ்ச் பேக்கை வைத்து தாக்கிய ஆசிரியர்.. 6 ஆம் வகுப்பு மாணவியின் மண்டை ஓடு முறிவு! அதிர்ச்சி சம்பவம்!

skull fracture 172413574

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் 6 ஆம் வகுப்பு மாணவிக்கு அவரது ஆசிரியர் உடல் ரீதியான தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் அந்த மாணவிக்கு மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டது. சாத்விகா நாகஸ்ரீ என அடையாளம் காணப்பட்ட சிறுமியின் தலையில் அவரது இந்தி ஆசிரியர் சலீமா பாஷா, ஸ்டீல் லஞ்ச் பாக்ஸ் உடன் இருந்த பையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.


வகுப்பில் ஏதோ குறும்பு செய்ததால் கோபமடைந்த ஆசிரியர், மாணவியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. முதலில், அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரியும் குழந்தையின் தாய், காயத்தின் தீவிரத்தை உணரவில்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி பின்னர் கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றல் இருப்பதாக கூறியதை அடுத்து அவரை அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. பின்னர் ​​பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.. அங்கு மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் மூலம் மாணவிக்கு மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர், கொடூரமாக தாக்குதல் நடத்திய ஆசிரியர் மற்றும் முதல்வர் இருவர் மீதும் புகார் அளித்துள்ளனர். புங்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாடா பகுதியில் உள்ள ஸ்ரீ தனுஷ் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவனின் கையை உடைத்ததாக ஒரு ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆசிரியர் ஒரு இரும்பு மேசையைப் பயன்படுத்தி மாணவனின் கையில் தாக்கியதால் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் கை மூன்று இடங்களில் உடைந்திருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தத் தாக்குதலுக்கு சமூக அறிவியல் ஆசிரியர் மோகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அச்சுறுத்தும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. கேரளாவில் 19 பேர் பலி! எப்படி பாதுகாப்பாக இருப்பது?

RUPA

Next Post

கியா கார்களுக்கு ரூ.2.25 லட்சம் தள்ளுபடி! ஜிஎஸ்டி குறைப்புக்கு முன்பே பண்டிகை கால சலுகை!

Wed Sep 17 , 2025
கியா இந்தியா தற்போது மிகப்பெரிய தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு செப்டம்பர் 22 முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, கார்களின் விலைகள் வெகுவாகக் குறையும். ஆனால் இந்தக் குறைப்புக்கு முன்பே, கியா இப்போது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை. இந்தச் சலுகை நாட்டில் உள்ள அனைத்து கியா டீலர்களிடமும் கிடைக்கிறது. கியா செல்டோஸ், கியா கேரன்ஸ் மற்றும் […]
kia car

You May Like