உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு தெருவில் பர்தா அணிந்து தனியாக நடந்து சென்ற பெண்ணை ஒருவர் மார்பகங்களை பிடித்து துன்புறுத்திய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,
உத்தரப்பிரதேச மாநிலம் நாக்பனி பகுதியில் பர்தா அணிந்து சென்ற ஒரு பெண்ணை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் பாலியல் முறையில் தொந்தரவு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், அந்த பெண் தனியாக சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த ஒரு நபர், திடீரென அந்த பெண்ணின் மார்பகங்களை பிடித்து பாலியல் துன்புறுத்தியுள்ளார். சுதாரித்து கொண்டு தன்னைக் காப்பாற்ற அந்த பெண் முயன்றதும், அந்த நபர் உடனே தப்பிச் சென்றதும் தெளிவாக காணப்படுகிறது. சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து, மொரதாபாத் காவல்துறையினர், நாக்பனி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொறுப்பாளருக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மூன்று விசாரணை அணிகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.